Gopikrishna Kanagalingam / 2015 ஓகஸ்ட் 11 , மு.ப. 02:59 - 0 - {{hitsCtrl.values.hits}}

தனது வலது கால் தொடைத் தசைநாரில் ஏற்பட்ட காயம் காரணமாகவே அவர் பங்குகொள்ளமாட்டார்.
இதற்கு முதல் இந்திய அணி சிம்பாப்வேக்கு மேற்கொண்டிருந்த சுற்றுப்பயணத்திலேயே விஜய்க்கு இந்தக்காயம் பெரிதாக பாதிப்பை ஏற்படுத்தாத அளவுக்கு ஏற்பட்டிருந்ததால், முற்பாதுகாப்பு நடவடிக்கையாக, இலங்கை கிரிக்கெட் சபைத் தலைவர் பதினொருவர் அணிக்கெதிரான போட்டியில் அவர் பங்கெடுத்திருக்கவில்லை.
இந்தத் தொடருக்கு பயணமாக முன், விஜய்க்கு காயம் இருப்பதாக கவலைகள் வெளியிடப்பட்டு சில அறிக்கைகள் வெளியான நிலையில், இந்திய டெஸ்ட் அணியின் தலைவர் விராத் கோலி, அவருக்கு உடற்தகுதி தொடர்பாக எந்தவித பிரச்சினைகளும் இல்லை, அவர் பயிற்சி போட்டிக்கு முன்பதாகவே போட்டியொன்றில் பங்கு பெறுவதற்கான உடற்தகுதியை பெற்று விடுவார் எனத் தெரிவித்திருந்தார்.
2014ஆம் ஆண்டு ஆரம்பத்திலிருந்து இந்திய அணி பங்குகொண்ட டெஸ்ட் போட்டிகளில் அதிகமான ஓட்டங்களைக் குவித்துள்ள முரளி விஜய், அக்காலத்தில் இந்தியாவின் சிறந்த துடுப்பாட்ட வீரராக விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
முரளி விஜய் இல்லாத நிலையில், ஷீகர் தவானும் லோகேஷ் ராகுலும் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாகக் களமிறங்கவுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .