2025 ஜூலை 05, சனிக்கிழமை

44 மாதங்களின் பின்னர் இலங்கைக்கு முதலாவது தொடர்

Editorial   / 2019 ஜூலை 28 , பி.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமது சொந்த மண்ணில் 44 மாதங்களின் பின்னர் ஒருநாள் சர்வதேசப் போட்டி (ODI) தொடரொன்றை இலங்கை கைப்பற்றியது.

சொந்த மண்ணில், இறுதியாக 2015ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிராக ODI தொடர் வெற்றியொன்றைப் பெற்றிருந்த இலங்கை, பங்களாதேஷுக்கெதிரான ODI தொடரைக் கைப்பற்றியதன் மூலம் 44 மாதங்களில் சொந்த மண்ணில் தனது முதலாவது ODI தொடர் வெற்றியைப் பெற்றது.

மூன்று போட்டிகள் கொண்ட பங்களாதேஷுக்கெதிரான ODI தொடரில்,நேற்று முன்தினம்  இடம்பெற்ற முதலாவது போட்டியில் வென்றிருந்த இலங்கை, கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில் இன்று இடம்பெற்ற இரண்டாவது போட்டியிலும் வென்றமையத் தொடர்ந்தே இன்னும் ஒரு போட்டி மீதமிருக்கையிலேயே பங்களாதேஷுக்கெதிரான தொடரைக் கைப்பற்றியது.  

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: பங்களாதேஷ்

பங்களாதேஷ்: 238/8 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: முஷ்பிக்கூர் ரஹீம் ஆ.இ 98 (110), மெஹிடி ஹஸன் 43 (49) ஓட்டங்கள். பந்துவீச்சு: அகில தனஞ்சய 2/39 [10], நுவான் பிரதீப் 2/53 [10], இசுரு உதான 2/58 [10])

இலங்கை: 242/3 (44.4 ஓவ. ) (துடுப்பாட்டம்: அவிஷ்க பெர்ணான்டோ 82 (75), அஞ்சலோ மத்தியூஸ் ஆ.இ 52 (57), குசல் மென்டிஸ் ஆ.இ 41 (74), குசல் பெரேரா 30 (34) ஓட்டங்கள். பந்துவீச்சு: முஸ்தபிசூர் ரஹ்மான் 2/50 [8], மெஹிடி ஹஸன் மிராஸ் 1/51 [10])

போட்டியின் நாயகன்: அவிஷ்க பெர்ணான்டோ

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .