2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

5-ம் நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம்

Editorial   / 2025 ஜூலை 06 , பி.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் 5-ம் நாள் ஆட்டம் தொடங்குவதில் மழை காரணமாக தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்தப் போட்டியில் 608 ஓட்டங்கள் இலக்கை இங்கிலாந்துக்கு நிர்ணயித்துள்ளது ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி. 5-ம் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 536 ஓட்டங்கள் எடுத்தால் இதில் வெற்றி பெறலாம். அந்த அணி தற்போது 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 72 ஓட்டங்கள் எடுத்துள்ளது. ஸாக் கிராவ்லி, பென் டக்கெட், ஜோ ரூட் ஆகியோர் ஆட்டமிழந்துள்ளனர்.

இந்திய அணி இதில் வெற்றி பெற இந்தப் போட்டியின் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை (06) இங்கிலாந்தின் வசம் உள்ள 7 விக்கெட்டுகளையும் கைப்பற்ற வேண்டும். இந்நிலையில், மழை காரணமாக 5-ம் நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்படலாம் என வானிலை அறிக்கைகள் தெரிவித்தன. அதன்படி தற்போது போட்டி நடைபெறும் பர்மிங்காம் - எட்ஜ்பாஸ்டன் மைதானம் மற்றும் அதையொட்டி உள்ள பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது.

மழை காரணமாக ஆடுகளம் ‘கவர்’ செய்யப்பட்டுள்ளது. மைதானத்தை பராமரித்து வரும் பணியாளர்கள் பிட்ச்சில் மழைநீர் புகாத வண்ணம் திரைகளை கொண்டு கவர் செய்துள்ளனர். அங்கு நண்பகல் நேரம் வரை மழை பொழிவு இருக்கும் என வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மழை நின்ற பிறகே ஆட்டம் தொடர வாய்ப்புள்ளதாக களத்தில் இருந்து வரும் நேரடி தகவல்கள் உறுதி செய்துள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .