2025 ஜூலை 03, வியாழக்கிழமை

54ஆவது சுப்பர் போல்: சம்பியனானது கன்ஸாஸ் சிற்றி சீஃப்ஸ்

Editorial   / 2020 பெப்ரவரி 04 , மு.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்க தேசிய கால்பந்தாட்ட லீக்கின் தேசிய கால்பந்தாட்ட மாநாட்டின் சம்பியன்களுக்கும், அமெரிக்க கால்பந்தாட்ட மாநாட்டின் சம்பியன்களுக்குமிடையே நடைபெறும் சுப்பர் போலில் கடந்தாண்டுக்கான பருவகாலத்தில் கன்ஸாஸ் சிற்றி சீஃப்ஸ் அணி சம்பியனானது.

ஐக்கிய அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தின் மியாமி கார்டின்ஸில் நேற்று அதிகாலை நடைபெற்ற குறித்த 54ஆவது சுப்பர் போலில், தேசிய கால்பந்தாட்ட மாநாட்டின் சம்பியன்களான சான் பிரான்ஸிஸ்கோ போர்ட்டினைர்ஸ் அணியும், அமெரிக்க கால்பந்தாட்ட மாநாட்டின் சம்பியன்களான கன்ஸாஸ் சிற்றி சீஃப்ஸ் அணியும் மோதின.

இந்நிலையில், மூன்றாவது காற்பகுதி முடிவில் 20-10 என்ற புள்ளிகள் கணக்கில் சான் பிரான்ஸிஸ்கோ போர்ட்டினைர்ஸ் முன்னிலையில் காணப்பட்டிருந்தபோதும், அதுவரையில் பலமானதாகக் காணப்பட்டிருந்த சான் பிரான்ஸிஸ்கோ போர்ட்டினைர்ஸின் பின்களத்தை தமது பற்றிக் மஹொமொஸ் மூலம் உடைத்து அபாரமானதொரு மீள்வருகையொன்றைப் புரிந்து 31 – 20 என்ற புள்ளிகள் கணக்கில் இறுதியில் கன்ஸாஸ் சிற்றி சீஃப்ஸ் சம்பியனானது.

அந்தவகையில், 50 ஆண்டுகள் காத்திருப்புக்குப் பின்னர் தமது முதலாவது சுப்பர் போல் வெற்றியை கன்ஸாஸ் சிற்றி சீஃப்ஸ் பெற்றுக் கொண்டுள்ளது.

இந்த சுப்பர் போலின் அதிக பெறுமதி வாய்ந்த வீரரான பற்றிக் மஹாமொஸ் தெரிவாகியிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .