2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

6-இலிருந்து 4-ஆகக் குறைந்த இலங்கையின் பந்துவீச்சாளர்கள்

Shanmugan Murugavel   / 2020 டிசெம்பர் 28 , மு.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தென்னாபிரிக்காவுக்கெதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், செஞ்சூரியனில் நேற்று முன்தினம் ஆரம்பித்த முதலாவது டெஸ்டில் இலங்கையின் பந்துவீச்சாளர்களின் எண்ணிக்கை நேற்றுடன் நான்காகக் குறைவடைந்துள்ளது.

விஷ்வ பெர்ணான்டோ, கசுன் ராஜித, லஹிரு குமார, வனிடு ஹஸரங்க, தசுன் ஷானக, தனஞ்சய டி சில்வா என ஆறு பந்துவீச்சாளர் தெரிவுடன் ஆரம்பத்தில் இலங்கை களமிறங்கியது.

இந்நிலையில், முதலில் தனஞ்சய டி சில்வாவை காயம் காரணமாக இலங்கை இழந்திருந்த நிலையில், நேற்று தனது இரண்டாவது ஓவரை வீசிக் கொண்டிருந்த ராஜித அடி வயிற்றுப் பகுதி உபாதை காரணமாக களத்தை விட்டு வெளியேறியிருந்தார்.

அந்தவகையில், அவர் இப்போட்டியில் இனி பந்துவீசுவதற்கான சாத்தியங்கள் குறைகாகவே காணப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .