2024 ஏப்ரல் 30, செவ்வாய்க்கிழமை

7 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் வெற்றி

Editorial   / 2024 ஏப்ரல் 13 , மு.ப. 06:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி வெற்றி பெற்றது.

லக்னோவில் உள்ள ஏகனா மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்ச்சியில்  வென்ற லக்னோ அணி பேட்டிங் தேர்வு செய்தது. குயின்டன் டி காக் - கே.எல்.ராகுல் ஓப்பனர்களாக களமிறங்கினர். 3-வது ஓவரை வீசிய கலீல் அகமது பந்தில் குயின்டன் டி காக் 19 ஓட்டங்களில் எல்பிடபள்யூ ஆனார். அடுத்து வந்த தேவ்தத் படிக்கல் 5வது ஓவரில் கலீல் அகமது வீசிய பந்தில் அதேபோல எல்பிடபள்யூ ஆனது ஆச்சரியம். 3 ஓட்டங்களில் கிளம்பினார்.

அவர்களைத் தொடர்ந்து களத்துக்கு வந்த மார்கஸ் ஸ்டாயினிஸ் 8 ரன்களில் விக்கெட் ஆனதும், அதேஓவரில் அடுத்து நிக்கோலஸ் பூரன் டக்அவுட் ஆனதும் லக்னோ ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. போராடிக்கொண்டிருந்த கே.எல்.ராகுலும் 39 ரன்களில் அவுட்டாக 10 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை பறிகொடுத்த லக்னோ 80 ஓட்டங்களை சேர்த்திருந்தது.

ஆயுஷ் பதோனி - தீபக் ஹூடா இணைந்து கள நிலவரத்தை மாற்றுவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்க்க, தீபக் ஹூடா 10 ஓட்டங்களில் பெவிலியன் திரும்பினார். ஆனால் ஆயுஷ் பதோனி பொறுப்பாக விளையாடி ரன்களைச் சேர்த்தார். அவருக்கு உறுதுணையாக நிற்காமல் க்ருணால் பாண்டியா 3 ஓட்டங்களில் விக்கெட்டானார்.

அடுத்து வந்த அர்ஷத் கான் நிதானத்தை கடைப்பிடித்து துணை நிற்க நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த லக்னோ 167 ஓட்டங்களைச் சேர்த்தது.

168 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியில், பிரித்வி ஷா - டேவிட் வார்னர் இருவரும் ஓப்பனிங் செய்தனர். யாஷ் தாக்குர் வீசிய பந்தில் போல்ட் ஆன வார்னர் எட்டு ஓட்டங்களுடன் வெளியேறவே, ஆறு பவுண்டரிகளுடன் 32 ஓட்டங்கள் சேர்த்தார் பிரித்வி ஷா.

அடுத்து இறங்கிய ஜேக் ஃப்ரேசர் மெக்குர்க் ஐந்து சிக்ஸர்கள், 2 ஃபோர்கள் என 35 பந்துகளில் 55 ரன்கள் எடுத்து அதிரடி காட்டினார். ரிஷப் பந்த் 41 ரன்கள், ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் 15 ஓட்டங்கள், ஷாய் ஹோப் 11 ஓட்டங்கள் என 18.1 ஓவர்களில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி வெற்றி பெற்றது


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X