2025 மே 16, வெள்ளிக்கிழமை

’7 விக்கெட்களை இழந்தும் நம்பிக்கையுடன் இருந்தேன்’

Freelancer   / 2023 நவம்பர் 08 , மு.ப. 08:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆப்கான் அணிக்கு எதிராக அபார வெற்றியை பதிவு செய்துள்ளது அவுஸ்ரேலியா. தோல்வியின் பிடியில் இருந்து ஆப்கான் வசம் இருந்த வெற்றியை பறித்துள்ளது. இந்தப் போட்டியில் இரட்டை சதம் அடித்து ஆட்டநாயகன் விருதை வென்றிருந்தார் மேக்ஸ்வெல்.

“நாங்கள்களத்தடுப்பு செய்த போது வெப்பத்தின் தாக்கம் அதிகம் இருந்தது. வெப்பத்தால் நான் அதிகம் உடற்பயிற்சி செய்யவில்லை. சரிவில் இருந்த போதும் சாதகமான மனநிலையில் இருந்தேன். எங்களது துடுப்பாட்ட திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என நினைத்தேன். அதே நேரத்தில் எனது வழக்கமான ஷாட்களை ஆட வேண்டும் என்ற முடிவில் இருந்தேன். சான்ஸே இல்லாத இந்த இன்னிங்ஸை ஒரு சான்ஸ் எடுத்து பார்த்து ஆடியதில் மகிழ்ச்சி. அது எனக்கு பெருமையாக உள்ளது. எங்கள் அணிக்கு நம்பிக்கை அதிகம். இந்த ஆட்டத்தின் மூலம் அது மேலும் உயர்ந்துள்ளது என மேக்ஸ்வெல் தெரிவித்தார்.

128 பந்துகளில் 201 ஒட்டங்களை  மெக்ஸ்வெல் குவித்தார். இதன் மூலம் பல்வேறு சாதனைகளை அவர் படைத்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அவுஸ்ரேலிய அணிக்காக அதிக ஓட்டங்கள்  குவித்தவர், உலகக் கிண்ணத்தில் அதிக சிக்ஸர்களை பதிவு செய்துள்ள வீரர்களில் 3 ஆவது இடம் (இதுவரை 43 சிக்ஸர்), ஒருநாள் கிரிக்கெட்டில் இலக்கை விரட்டிய போது அதிக ஓட்டங்கள் குவித்தவர், உலகக் கோப்பையில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரர்களில் 3 ஆவது இடம் போன்ற சாதனைகளை அவர் படைத்துள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .