2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

ODI தொடர் இந்தியாவுக்கா? அவுஸ்திரேலியாவுக்கா?: தீர்மானமிக்க மூன்றாவது போட்டி நாளை

Editorial   / 2019 ஜனவரி 17 , பி.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய, இந்திய அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒருநாள் சர்வதேசப் போட்டி (ODI), மெல்பேணிl இலங்கை நேரப்படி நாளை காலை 7.50 மணிக்கு ஆரம்பிக்கிறது.

மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியை அவுஸ்திரேலியா வென்றதுடன், இரண்டாவது போட்டியை இந்தியா வென்ற நிலையில் நாளைய போட்டி தீர்மானமிக்கதாக அமைகிறது.

அந்தவகையில், வழமை போன்று இந்திய அணியின் துடுப்பாட்டம் அவ்வணியின் முதல் மூன்று வீரர்களான ரோகித் ஷர்மா, ஷீகர் தவான், விராத் கோலியிலேயே தங்கியுள்ளது. இவர்களின் பெறுபேறே போட்டியின் முடிவை பெரும்பாலாக தீர்மானிக்கும்.

இதேவேளை, ஆறாவது பந்துவீச்சாளருக்காக இந்தியா தடுமாறுகையில், விஜய் ஷங்கர் அல்லது கேதார் யாதவ் அணியில் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதுடன், கடந்த போட்டியில் ஓட்டங்களை வாரி வழங்கிய மொஹமட் சிராஜ்ஜுக்குப் பதிலாக மீண்டும் கலீல் அஹமட் அல்லது யுஸ்வேந்திர சஹால் அணியில் இடம்பெறக்கூடிய வாய்ப்புகளும் காணப்படுகிறது.

இதேவேளை, மறுப்பக்கமாக முதுகு உபாதைக்குள்ளாகிய அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சாலர் ஜேசன் பெஹ்ரென்டோர்ட் ஓய்வெடுக்கவுள்ள நிலையில் அவருக்குப் பதிலாக பில்லி ஸ்டான்லேக்கும் நேதன் லையனுக்குப் பதிலாக அடம் ஸாம்பாவும் அணியில் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவுஸ்திரேலிய அணியைப் பொறுத்தவரையில் தமது தலைவர் ஆரோன் பின்ஞ் தொடர்ச்சியாக ஓட்டங்களைப் பெறாமல் ஆட்டமிழக்கும் விதம் கவலையளிக்கும் என்கின்ற நிலையில், தன்மீது மேலதிக அழுத்தங்கள் ஏற்படுவதை தடுப்பதற்கு இப்போட்டியில் சிறப்பாகச் செயற்படுவதற்கு ஆரோன் பின்ஞ் முயலுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .