2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

T20WorldCup டி20 உலகக் கோப்பை: இந்திய அணி நாளை அறிவிப்பு

Editorial   / 2025 டிசெம்பர் 19 , பி.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நடப்பு சாம்பியன் இந்தியா உள்பட 20 அணிகள் பங்கேற்கும் 10-வது ஐ.சி.சி. டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை இந்தியா, இலங்கை இணைந்து நடத்துகின்றன. அடுத்த ஆண்டு (2026) பெப்ரவரி 7-ந் திகதி தொடங்கி மார்ச் 8-ந் திகதி வரை இந்த போட்டி நடக்கிறது.

இதில் நடப்பு சாம்பியன் இந்தியா, அவுஸ்திரேலியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, முதல் முறையாக தகுதி பெற்றுள்ள இத்தாலி உள்பட 20 அணிகள் பங்கேற்கின்றன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்-8 சுற்றுக்கு தகுதி பெறும்.

ஒரு மாதத்திற்கு முன்பே உலகக் கோப்பை தொடருக்கான தங்களது அணியை முன்கூட்டியே ஒவ்வொரு கிரிக்கெட் வாரியமும், சமர்பிக்க வேண்டும்

இந்த நிலையில், டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி நாளை அறிவிக்கப்பட உள்ளது. அதன்படி தேர்வுக் குழு தலைவர் அகர்கர் தலைமையில் நாளை ஆலோசனை நடைபெற உள்ளது.ஆலோசனையில் இந்திய அணி தலைமை பயிற்சியாளர் கம்பீரும் பங்கேற்க உள்ளார். ஆலோசனை நிறைவடைந்த பிறகு இந்திய அணி அறிவிக்கப்பட உள்ளது.

2026 டி20 உலகக் கோப்பையில் இந்தியா விளையாடும் போட்டி அட்டவணை:

இந்தியா - அமெரிக்கா: பெப்ரவரி 7 (மும்பை )

இந்தியா - நமீபியா: பெப்ரவரி 12 (டெல்லி)

இந்தியா - பாகிஸ்தான்: பெப்ரவரி 15 - (கொழும்பு )

இந்தியா - நெதர்லாந்து : பெப்ரவரி 18 (அகமதாபாத் ) .


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X