Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 பெப்ரவரி 28 , மு.ப. 04:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை, இந்தியா, பங்களாதேஷ் அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில், புதிய காயமொன்று காரணமாக, இலங்கையணியின் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்கான அணிகளின் தலைவரான அஞ்சலோ மத்தியூஸ் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அணித்தலைவராக கடந்தாண்டு ஜனவரியில் நியமிக்கப்பட்ட பின்னர் ஒரெயொரு போட்டியில் மாத்திரம் பங்களாதேஷ், இலங்கை, சிம்பாப்வே அணிகள் பங்கேற்ற ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் விளையாடிய பின்னர், பின்தொடைத் தசைநார் காயமொன்றுடன் பங்களாதேஷிலிருந்து அஞ்சலோ மத்தியூஸ் நாடு திரும்பியிருந்தார்.
இந்நிலையில், எதிர்வரும் ஆறாம் திகதி ஆரம்பமாகவுள்ள முத்தரப்பு இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடருக்கு உடற்றகுதியைப் பெறுவதற்கான பயிற்சிகளில் 30 வயதான அஞ்சலோ மத்தியூஸ் ஈடுபடும்போது கெண்டைக்கால் பின்தசை காயமொன்றுக்கு உள்ளானமை காரணமாகக குறித்த தொடரில் பங்கேற்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
அஞ்சலோ மத்தியூஸின் காயம் மோசமானதில்லையென்ற போதும் இலங்கை கிரிக்கெட் சபையின் மருத்துவக் குழுவினரால் உடற்றகுதியை நிரூபிப்பதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை.
இந்நிலையில், அஞ்சலோ மத்தியூஸ் இல்லாத நிலையில், பங்களாதேஷில் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளிலும் தலைமைகளிலும் இலங்கையணிக்கு தலைமை தாங்கிய இலங்கையணியின் டெஸ்ட் போட்டிகளுக்கான அணித்தலைவர் தினேஷ் சந்திமாலே குறித்த முத்தரப்பு இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடருக்கும் தலைமை தாங்குகிறார்.
இதேவேளை, குறித்த தொடரில் பங்கேற்கும் ஆரம்ப கட்ட 20 பேர் கொண்ட குழாம் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், 15 பேர் கொண்ட இறுதி குழாம் இன்று அறிவிக்கப்படவுள்ளது.
குழாம்: தினேஷ் சந்திமால் (அணித்தலைவர்), உபுல் தரங்க, தனுஷ்க குணதிலக, குசல் மென்டிஸ், தசுன் ஷானக, குசல் பெரேரா, திஸர பெரேரா, ஜீவன் மென்டிஸ், சுரங்க லக்மால், நிரோஷன் டிக்வெல்ல, சதீர சமரவிக்கிரம, இசுரு உதான, ஜெப்ரி வன்டர்சே, அகில தனஞ்சய, அமில அப்போன்ஸோ, அசித பெர்ணான்டோ, லஹிரு குமார, நுவான் பிரதீப், துஷ்மந்த சமீர, தனஞ்சய டி சில்வா.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago