Editorial / 2019 டிசெம்பர் 03 , பி.ப. 04:04 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கின் அடுத்த பருவகாலத்துக்கான வீரர்களுக்கான ஏலப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டிருந்த நிலையில், குறித்த பட்டியலில் அவுஸ்திரேலியாவின் சிரேஷ்ட வேகப்பந்துவீச்சாளரான மிற்செல் ஸ்டார்க் தனது பெயரை இணைத்துக் கொள்ளவில்லை.
எவ்வாறெனினும், கடந்த பருவகால ஏலத்த்தில் தம்மைச் சேர்த்துக் கொள்ளாத கிளென் மக்ஸ்வெல், ஆரோன் பின்ஞ் ஆகியோர் இப்பருவகால ஏலத்தில் தமது பெயர்களைச் சேர்த்துக் கொண்டுள்ளனர்.
இதேவேளை, மிற்செல் ஸ்டார்க்கின் சக சிரேஷ்ட அவுஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர்களான பற் கமின்ஸ், ஜொஷ் ஹேசில்வூட் ஆகியோர் ஏலப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
இந்நிலையில், தென்னாபிரிக்காவின் சிரேஷ்ட வேகப்பந்துவீச்சாளர் டேல் ஸ்டெய்ன், இலங்கையணியின் முன்னாள் தலைவர் அஞ்சலோ மத்தியூஸ் ஆகியோரும் ஏலப் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.
இதேவேளை, கொல்கத்தா நைட் றைடர்ஸ் அணியிலிருந்து கழட்டி விடப்பட்ட றொபின் உத்தப்பாவும் ஏலப் பட்டியலில் காணப்படுகின்றார்.
அந்தவகையில், 2021ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பாரிய ஏலத்தில் தமது குழாம்களை அணிகள் மாற்றும் என்ற நிலையில், இம்முறை ஏலத்தில் அதிகபட்சமாக 73 வீரர்களே ஏலம் போகலாம் என்ற நிலையில், அதில் 29 பேர் வரையில் வெளிநாட்டு வீரர்களாக இருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
2 hours ago
7 hours ago
27 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago
27 Jan 2026