2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

அடுத்தாண்டுடன் விடைபெறும் லியாண்டர் பயஸ்

Editorial   / 2019 டிசெம்பர் 26 , பி.ப. 08:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

தொழில்முறை டென்னிஸ் வீரரொருவராக 2020ஆம் ஆண்டு பருவகாலமானது தனது பிரியாவிடை ஆண்டாக இருக்கும் என இந்தியாவின் டென்னிஸ் ஜாம்பவானான லியாண்டர் பயஸ் நேற்று  அறிவித்துள்ளார்.

தெரிவு செய்யப்பட்ட தொடர்களில் விளையாடுவேன் எனவும், தனது அணியுடன் பயணிப்பேன் எனவும், உலகளாவிய ரீதியிலுள்ள தனது அனைத்து இரசிகர்களுடன் கொண்டாடுவேன் என 46 வயதான லியாண்டர் பயஸ் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

ஏறத்தாழ 30 ஆண்டுகள் அனுபவத்தைக் கொண்டுள்ள லியாண்டர் பயஸ், ஆண்கள் இரட்டையர் பிரிவில் எட்டும், கலப்பு இரட்டையர் பிரிவில் 10உம் என மொத்தமாக 18 கிரான்ட் ஸ்லாம் பட்டங்களை லியாண்டர் பயஸ் பெற்றிருந்தார்.

இதேவேளை, இதுவரையில் இந்தியாவின் ஒரேயொரு டென்னிஸ் பதக்கமாக, ஐக்கிய அமெரிக்காவின் அத்லாண்டாவில் 1996ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் லியாண்டர் பயஸ் வென்ற வெண்கலப் பதக்கமே காணப்படுகிறது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .