Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 பெப்ரவரி 27 , பி.ப. 11:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட் ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் இரண்டாவது போட்டி மெளன்ட் மகட்டரேயில், இலங்கை நேரப்படி நாளை காலை 6.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள நிலையில், இப்போட்டியில் நியூசிலாந்து அணித்தலைவர் கேன் வில்லியம்சன் விளையாடுவது சந்தேகத்துக்கிடமானதாகக் காணப்படுகிறது.
கேன் வில்லியம்சனுக்குக் காணப்படும் பின்தொடை தசைநார் உபாதை காரணமாகவே, போட்டி ஆரம்பிப்பதற்கு முன் 100 சதவீத உடற்றகுதியை அடைந்து விடுவாரா என்பது சந்தேகத்துக்கிடமானதாகக் காணப்படுகின்றது.
இந்நிலையில், கேன் வில்லியம்சன் இப்போட்டியில் விளையாடமல் போகும் பட்சத்தில் அவருக்குப் பதிலாக மார்க் சப்மன் அணியில் இடம்பெறவுள்ளதுடன், அணித்தலைவராக உப அணித்தலைவர் டிம் செளதி செயற்படுவார். எவ்வாறெனினும், நேரடியாக கேன் வில்லியம்சனின் மூன்றாமிடத்திலேயே மார்க் சப்மன் துடுப்பெடுத்தாடுவரா என்பது தெளிவில்லாமலுள்ளது. பெரும்பாலும் றொஸ் டெய்லர் அல்லது டொம் லேதம் மூன்றாமிடத்தில் துடுப்பெடுத்தாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மறுபக்கம், முதலாவது போட்டியில் விளையாடிய இங்கிலாந்தின் அதேயணியே இப்போட்டியிலும் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்பார்க்கப்படும் நியூசிலாந்து அணி: மார்டின் கப்தில், கொலின் மன்றோ, டொம் லேதம், றொஸ் டெய்லர், மார்க் சப்மன், ஹென்றி நிக்கொல்ஸ், கொலின் டி கிரான்ட்ஹொம், மிற்செல் சான்ட்னெர், டிம் செளதி, ட்ரெண்ட் போல்ட், இஷ் சோதி.
எதிர்பார்க்கப்படும் இங்கிலாந்து அணி: ஜேஸன் றோய், ஜொனி பெயார்ஸ்டோ, ஜோ றூட், ஒய்ன் மோர்கன், பென் ஸ்டோக்ஸ், ஜொஸ் பட்லர், மொயின் அலி, கிறிஸ் வோக்ஸ், டேவிட் வில்லி, டொம் குரான், அடில் ரஷீட்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago