2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

அதிக தொகைக்கு போன ஸ்டோக்ஸ்

Editorial   / 2018 ஜனவரி 28 , பி.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கின் இவ்வாண்டுக்கான ஏலம், நேற்றும் இன்றும் இடம்பெற்றிருந்த நிலையில், இரண்டாவது ஆண்டாக, இங்கிலாந்து அணியின் சகலதுறை வீரர் பென் ஸ்டோக்ஸ் அதிக விலைக்கு ஏலம் போனார். பென் ஸ்டோக்ஸை, 12.5 கோடி இந்திய ரூபாய்களுக்கு ராஜஸ்தான் றோயல்ஸ் அணி வாங்கியிருந்தது.

இந்நிலையில், இந்திய வீரர்களில் அதிகபட்சமாக, இடதுகை வேகப்பந்துவீச்சாளரான ஜெய்டேவ் உன்டகட்டை 11.5 கோடி இந்திய ரூபாய்களுக்கு ராஜஸ்தான் றோயல்ஸ் அணி வாங்கியிருந்தது. ஜெய்டேவ் உன்டகட்டுக்கு அடுத்ததாக, துடுப்பாட்ட வீரர் லோகேஷ் ராகுலை 11 கோடி இந்திய ரூபாய்களுக்கு கிங்ஸ் லெவிண் பஞ்சாப் அணி வாங்கியதோடு, துடுப்பாட்ட வீரர் மனீஷ் பாண்டேயை சண்றைஸர்ஸ் ஹைதரபாத் அணி 11 கோடி இந்திய ரூபாய்களுக்கு வாங்கியிருந்தது.

இலங்கை வீரர்களில், சுழற்பந்துவீச்சாளர் அகில தனஞ்சயவை 50 இலட்சம் இந்திய ரூபாய்களுக்கு மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியிருந்ததுடம், வேகப்பந்துவீச்சாளர் துஷ்மந்த சமீரவை 50 இலட்சம் இந்திய ரூபாய்களுக்கு ராஜஸ்தான் றோயல்ஸ் வாங்கியிருந்தது.  இந்நிலையில், ஏலத்தில் இடம்பெற்றிருந்த லசித் மலிங்க, திஸர பெரேரா, குசல் பெரேரா, நிரோஷன் டிக்வெல்ல ஆகியோரை எந்த அணியும் வாங்கவில்லை.

இதேவேளை, லசித் மலிங்க தவிர, மார்டின் கப்தில், ஹஷிம் அம்லா, டேல் ஸ்டெய்ன், ஒய்ன் மோர்கன், ஷோர்ன் மார்ஷ், ஜோ றூட் உள்ளிட்ட முன்னணி வீரர்களையும் எவரும் வாங்கவில்லை.

இந்நிலையில், டெல்லி டெயார்டெவில்ஸ் அணியால் 20 இலட்சம் இந்திய ரூபாய்களுக்கு நேபாளத்தின் சுழற்பந்துவீச்சாளர் சந்தீப் லமிச்சன்னே வாங்கப்பட்ட நிலையில், இந்தியன் பிறீமியர் லீக்கில் பங்கேற்கும் முதலாவது நேபாள வீரராக இவர் மாறுகின்றார்.

இதேவேளை, ஆப்கானிஸ்தானின் சுழற்பந்துவீச்சாளர் ரஷீட் கானையும் சகலதுறை வீரர் மொஹமட் நபியையும் சண்றைசர்ஸ் ஹைதரபாத் அணி வாங்கியிருந்த நிலையில், 16 வயதான சுழற்பந்துவீச்சாளர் முஜீப் ரஹ்மான் கிங்ஸ் லெவிண் பஞ்சாப் அணியால் வாங்கப்பட்டுள்ளதுடன், இடதுகை சுழற்பந்துவீச்சாளர் ஸகிர் கான் ராஜஸ்தான் றோயல்ஸ் அணியால் வாங்கப்பட்டுள்ள நிலையில், இம்முறை நான்கு ஆப்கானிஸ்தான் வீரர்கள் இவ்வாண்டு இந்தியன் பிறீமியர் லீக்கில் பங்கேற்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .