2025 ஜூலை 09, புதன்கிழமை

அன்டி மரேக்கு வெற்றி மீள்வருகை

Editorial   / 2019 ஜனவரி 02 , பி.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிறிஸ்பேஸ் சர்வதேச டென்னிஸ் தொடரில், நேற்று இடம்பெற்ற முதலாவது சுற்றுப் போட்டியொன்றில் அவுஸ்திரேலியாவின் ஜேம்ஸ் டக்வேர்த்தை எதிர்கொண்ட உலகின் முன்னாள் முதல்நிலை வீரரான அன்டி மரே, 6-3, 6-4 என்ற நேர் செட்களில் வென்றார். கடந்தாண்டு செப்டெம்பருக்குப் பின்னர் மரே பங்கேற்ற முதலாவது போட்டியாக இது அமைந்தது.

இதேவேளை, நேற்று இடம்பெற்ற இத்தொடரின் பெண்களுக்கான முதலாவது சுற்றுப் போட்டியொன்றில், உலகின் ஆறாம் நிலை வீராங்கனையான ஐக்கிய அமெரிக்காவின் சொலனி ஸ்டீவன்ஸை 6-4, 6-3 என்ற நேர் செட்களில் ஐக்கிய இராச்சியத்தின் ஜொஹன்னா கொன்டா வென்றிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .