Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2021 செப்டெம்பர் 12 , பி.ப. 07:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் இடம்பெற்றுவரும் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டெனிஸ் போட்டிகளின் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்ற பிரித்தானியாவின் எம்மா ராடுகானு, சம்பியன் பட்டத்தை வென்றார்.
பிரித்தானியாவைச் சேர்ந்த வீராங்கனையொருவர் அமெரிக்க ஓபன் டெனிஸ் போட்டியில் 53ஆண்டுகளுக்குப் பின்னர் பட்டம் வென்றுள்ளார் என்பது விசேட அம்சமாகும்.
மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில் கனடாவின் லேலா பெர்னான்டஸை 6-4, 6-3 என்ற நேர் செட்களில் தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை எம்மா ராடுகானு வென்றுள்ளார்.
சம்பியன் பட்டம் வென்ற எம்மா ராடுகானுவுக்கு பிரித்தானிய மகாராணி எலிசபெத் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் “ எம்மா ராடுகானுவின் கடின உழைப்பு, அர்ப்பணிப்புக்கு கிடைத்த வெற்றிதான் சாம்பியன் பட்டம். என்னுடைய வாழ்த்துகளை எம்மா ராடுகானுவுக்குத் தெரிவிக்கிறேன். இளம் வயதில் மிகச்சிறந்த சாதனையை எம்மா ராடுகானு செ்யதுள்ளார். உங்களின் திறமையில் எனக்கு துளியும் சந்தேகமில்லை. உங்களுடன் மோதிய பெர்னான்டஸ் எதிர்கால தலைமுறையினருக்கு தூண்டுகோலாக இருப்பார்“ எனத் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி கடந்த 44 ஆண்டுகளில் பிரித்தானியாவைச் சேர்ந்த வீராங்கனையொருவர் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றதும் இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
கடைசியாக கடந்த 1977ஆம் ஆண்டு விர்ஜினா வேட் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றபின்னர் இப்போது எம்மா ராடுகானு வென்றுள்ளார்.
இதேவேளை, நாளை இடம்பெறவுள்ள ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் உலகத் தரவரிசையில் முதல் நிலை வீரரான சேர்பியாவின் நொவெக் ஜகோவிச் மற்றும் 2ஆம் நிலை வீரரான ரஷ்யாவின் டேனில் மெட்வதேவ் ஆகியோர் மோதவுள்ளனர்.
14 minute ago
29 minute ago
47 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
29 minute ago
47 minute ago
51 minute ago