2025 ஜூலை 21, திங்கட்கிழமை

அயர்லாந்துக் குடியரசு – சுவீடன் போட்டி சமநிலை

Editorial   / 2017 நவம்பர் 12 , பி.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ரஷ்யாவில் அடுத்தாண்டு இடம்பெறவுள்ள கால்பந்தாட்ட உலகக் கிண்ணத்துக்கான தகுதிப் போட்டிகளில், நேற்று இடம்பெற்ற முதற்சுற்று போட்டிகள் இரண்டு சமநிலையில் முடிவடைந்தன.

அயர்லாந்துக் குடியரசு, சுவீடன் ஆகிய அணிகளுக்கிடையிலான முதலாவது சுற்று தகுதிப் போட்டியில் இரண்டு அணிகளும் கோலெதனையும் பெறாத நிலையில் போட்டி சமநிலையில் முடிவடைந்தது.  அந்தவகையில், இரண்டாவது சுற்றில் வெற்றிபெறும் அணியே உலகக் கிண்ணத்துக்குத் தகுதிபெறவுள்ளது.

பெரு, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது சுற்று தகுதிப் போட்டியிலும் இரண்டு அணிகளும் கோலெதனையும் பெறாத நிலையில் போட்டி சமநிலையில் முடிவடைந்தது. ஆக, இவ்விரண்டு அணிகளுக்கிடையிலான இரண்டாவது சுற்றுப் போட்டியில் வெற்றிபெறும் அணியே உலகக் கிண்ணத்துக்கு தகுதிபெறவுள்ளது.

இந்நிலையில், தமது முதலாவது சுற்று தகுதிப் போட்டியில், 1-0 என்ற கோல் கணக்கில் சுவீடனிடம் தோல்வியடைந்த இத்தாலி, நாளை இடம்பெறவுள்ள இரண்டாவது சுற்று தகுதிகாண் போட்டியில் வெற்றியடையாவிட்டால், 1958ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதற்தடவையாக உலகக் கிண்ணத்துக்கு தகுதிபெறத் தவறும். இதுதவிர, ஆறாவது உலகக் கிண்ணத்தில் விளையாட எதிர்பார்த்துள்ள இத்தாலி அணியின் தலைவரும் கோல் காப்பாளருமான ஜல்லூயிஜி புபானின் கனவும் கானல் நீராகி விடும்.

இதேவேளை, நேற்று  இடம்பெற்ற ஆபிரிக்க பிராந்தியத்துக்கான தகுதிகாண் போட்டிகளில், ஐவரிகோஸ்டை 2-0 என்ற கோல் கணக்கில் வென்ற மொராக்கோவும் லிபியாவுடனான போட்டியில் கோலெதனையும் பெறாமல் போட்டியை சமநிலையில் முடித்துக் கொண்ட துனீஷியாவும் உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு தகுதிபெற்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X