Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2018 ஜூன் 28 , மு.ப. 04:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
அயர்லாந்து, இந்திய அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில், டப்ளினில் நேற்று இடம்பெற்ற முதலாவது போட்டியில் இந்தியா வென்றது.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற அயர்லாந்து அணியின் தலைவர் கரி வில்சன், தமது அணி முதலில் களத்தடுப்பிலீடுபடும் என அறிவித்தார்.
அந்தவகையில், முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா, 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 208 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், ரோகித் ஷர்மா 97 (61), ஷீகர் தவான் 74 (45) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், பீற்றர் சேஸ் 4 விக்கெட்டுகளைஉக் கைப்பற்றினார்.
பதிலுக்கு, 209 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து, 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 132 ஓட்டங்களைப் பெற்று 76 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில், ஜேம்ஸ் ஷனொன் 60 (35) ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில், குல்தீப் யாதவ் 4, யுஸ்வேந்திர சஹால் 3, ஜஸ்பிரிட் பும்ரா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இப்போட்டியின் நாயகனாக குல்தீப் யாதவ் தெரிவானார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
17 minute ago
26 minute ago
1 hours ago