2026 ஜனவரி 17, சனிக்கிழமை

அரையிறுதியில் எகிப்து, நைஜீரியா

Shanmugan Murugavel   / 2026 ஜனவரி 12 , மு.ப. 08:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொரோக்கோவில் நடைபெற்று வரும் தேசங்களுக்கான ஆபிரிக்கக் கிண்ணத் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு எகிப்து, நைஜீரியா ஆகியன தகுதி பெற்றுள்ளன.

ஞாயிற்றுக்கிழமை (11) நடைபெற்ற நடப்புச் சம்பியன்களான ஐவரி கோஸ்டுடனான காலிறுதிப் போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் வென்றே எகிப்து அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.

எகிப்து சார்பாக ஓமர் மர்மெளஷ், றமி றபியா, மொஹமட் சாலா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். ஐவரி கோஸ்ட் சார்பாக ஒரு கோல் ஓவ்ண் கோல் முறையில் பெறப்பட்டிருந்ததோடு, மற்றைய கோலை குயெலா டுவே பெற்றிருந்தார்.

இதேவேளை சனிக்கிழமை (10) நடைபெற்ற அல்ஜீரியாவுடனான காலிறுதிப் போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் வென்றே அரையிறுதிப் போட்டிக்கு நைஜீரியா தகுதி பெற்றிருந்தது. நைஜீரியா சார்பாக விக்டர் ஒஸிம்ஹென், அகொர் அடம்ஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X