Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Editorial / 2018 நவம்பர் 18 , பி.ப. 10:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐரோப்பிய கால்பந்தாட்ட சங்கங்களின் கூட்டமைப்பின் தேசங்களுக்கான லீக் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு போர்த்துக்கல் தகுதிபெற்றுள்ளது.
இத்தாலியில் இலங்கை நேரப்படி இன்று அதிகாலை இடம்பெற்ற இத்தாலியுடனான குழு ஏ3 போட்டியொன்றை 0-0 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடித்துக் கொண்டமையையடுத்தே குறித்த குழுவில் முதலிடம் பெற்றதுடன், குறித்த தொடரின் அரையிறுதிப் போட்டிக்கும் போர்த்துக்கல் தகுதிபெற்றுக் கொண்டது.
இதேவேளை, நடப்பு யூரோ சம்பியன்களாகவும் காணப்படும் போர்த்துக்கல் குறித்த முடிவின் மூலம் வழமையான தகுதிகாண் போட்டிகளின் மூலம் 2020ஆம் ஆண்டு யூரோ கிண்ணத் தொடருக்கு தகுதிபெறாவிட்டாலும் தற்போது தகுதிப் போட்டியொன்றை போர்த்துக்கல் கொண்டிருக்கிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
2 hours ago