Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 ஒக்டோபர் 31 , மு.ப. 10:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
சீனாவின் ஷென்ஸானில் நடைபெற்று வரும் பெண்கள் டென்னிஸ் சங்க இறுதிப் போட்டிக்கு, உலகின் எட்டாம்நிலை வீராங்கனையான எலினா ஸ்விட்டொலினா தகுதிபெற்றுள்ளார்.
நேற்று நடைபெற்ற உலகின் ஐந்தாம்நிலை வீராங்கனையான சிமொனா ஹலெப்புடனான குழுநிலைப் போட்டியை வென்றமையைத் தொடர்ந்தே ஒரு போட்டி மீதமிருக்கையிலேயே அரையிறுதிப் போட்டிக்கு நடப்புச் சம்பியனான ஸ்விட்டொலினா தகுதிபெற்றிருந்தார்.
இப்போட்டியில் 7-5, 6-3 என்ற நேர் செட்களில் றோமானியாவின் ஹலெப்பை, உக்ரேனின் ஸ்விட்டொலினா வென்றிருந்தார். சமபலம் கொண்டவர்களாகவே இப்போட்டியில் இருவரும் தோன்றியிருந்தபோதும் முக்கியமான தருணங்களில், ஹலெப்பை விட ஸ்விட்டொலினா தொடர்ச்சியான தன்மையை வென்றிருந்தார்.
இதேவேளை, நேற்று நடைபெற்ற மற்றைய போட்டியில், உலகின் நான்காம்நிலை வீராங்கனையான பியன்கா அன்ட்றீச்சுவை, உலகின் இரண்டாம்நிலை வீராங்கனையான கரோலினா பிளிஸ்கோவா வென்றிருந்தார்.
இப்போட்டியின் முதலாவது செட்டை 3-6 என்ற ரீதியில் இழந்த அன்ட்றீச்சு, 2-0 என இச்செட்டில் முன்னிலையிலிருக்கும்போது மோசமான முறையில் தரையில் காலைப் பதித்தமை காரணமாக முழங்காலை அழுத்தத்துக்குள்ளாகியமையால், முதலாவது செட்டைத் தொடர்ந்தபோதும், அதனுடன் போட்டியிலிருந்து விலக செக் குடியரசின் பிளிஸ்கோவா வென்றார்.
அந்தவகையில், ஸ்விட்டொலினா, ஹலெப், பிளிஸ்கோவா, அன்ட்றீச்சு ஆகியோரைக் கொண்ட இக்குழுவில், நாளை மாலை நடைபெறவுள்ள பிளிஸ்கோவா, ஹலெப்புக்கிடையிலான போட்டியில் வெற்றி பெறுபவர், ஸ்விட்டொலினாவுடன் இக்குழுவிலிருந்து அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெறுவார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago