Shanmugan Murugavel / 2015 செப்டெம்பர் 15 , பி.ப. 05:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
டெஸ்ட் போட்டிகளில் வைத்து அவுஸ்திரேலியாவை வெல்வதற்கான மிகச்சிறந்த வாய்ப்பாக, எதிர்வரும் டெஸ்ட் தொடர் அமையுமென, பங்காளதேஷ் டெஸ்ட் தலைவர் முஷ்பிக்கூர் ரஹீம் தெரிவித்துள்ளார்.
அனுபவம் குறைவான அவுஸ்திரேலிய அணி, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் எதிர்வரும் 9ஆம் திகதி முதல் பங்குபற்றவுள்ள நிலையிலேயே, ரஹீம் இவ்வாறு கூறியுள்ளார்.
'அவுஸ்திரேலியாழைவ வெல்வதற்கான மிகப்பெரிய வாய்ப்பு இது. இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் 100 சதவீதத்துக்கும் அதிகமான திறமையை நாம் வழங்குவோம்" என ரஹீம் தெரிவித்தார். போட்டியின் ஐந்து நாட்களும் விளையாடினால், பங்களாதேஷ் அணியால் வெற்றிபெற முடியுமென நம்பிக்கை வெளியிட்ட ரஹீம், பங்களாதேஷின் ஒருநாள் சர்வதேசப் போட்டி அணியின் அண்மைக்கால சிறந்த பெறுபேறுகளைச் சுட்டிக்காட்டி, அவ்வணி போல் டெஸ்ட் அணியும் மாறுமென நம்புவதாகத் தெரிவித்தார்.
எனினும், அவுஸ்திரேலிய அணி பலவீனமான நிலையில் காணப்படவில்லை என்பதை ஏற்றுக் கொண்ட ரஹீம், 'அவர்கள் இளைய அணியாக இருப்பதால் மாத்திரம் திடீரெனத் தோற்கடிப் போவதில்லை" எனத் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .