2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் ஆரம்பம்

Editorial   / 2019 ஜனவரி 14 , மு.ப. 12:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆண்டுதோறும் இடம்பெறும் 4 கிரான்ட் ஸ்லாம் போட்டித் தொடர்களில் முதலாவது தொடரான அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடர், இன்று (14) அதிகாலை ஆரம்பிக்கிறது. இம்மாதம் 27ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள தொடர், ஏராளமான எதிர்பார்ப்புகளுடன் ஆரம்பிக்கிறது.

ஆண்கள் ஒற்றையர் போட்டிகளில் சுவிற்ஸர்லாந்தின் ரொஜர் பெடரரும், பெண்கள் ஒற்றையர் போட்டிகளில் டென்மார்க்கின் கரோலின் வொஸ்னியாக்கியும், தங்களது பட்டங்களைத் தக்கவைக்கும் நோக்கில் களமிறங்குகின்றனர்.

முக்கியமான வீரர்களில், பெண்களில் 5ஆம் நிலை வீராங்கனையான ஐக்கிய அமெரிக்காவின் ஸ்லோவான் ஸ்டீவன்ஸ், இன்று காலை 7 மணியளவில், தனது போட்டியில் பங்குபற்றுகிறார்.

இரண்டாம் நிலை வீராங்கனையான ஜேர்மனியின் அங்கெலிக் கேர்பர், காலை 9 மணியளவிலும், 9ஆம் நிலை வீராங்கனையான நெதர்லாந்தின் கிகி பேர்ட்டென்ஸ், அதே நேரத்திலும் பங்குகொள்கின்றனர்.

பின்னர், மதியம் 1.30 மணியளவில், 8ஆம் நிலை வீராங்கனையான பெட்ரா குவிற்றோவா, இன்னொரு போட்டியில் 3ஆம் நிலை வீராங்கனையும் நடப்புச் சம்பியனுமான கரோலின் வொஸ்னியாக்கி ஆகியோரும் கலந்துகொள்கின்றனர்.

நாளைய போட்டியில் 7ஆம் நிலை வீராங்கனை கரோலின் பிளிஸ்கோவா, 16ஆம் நிலை வீராங்கனை செரினா வில்லியம்ஸ், 6ஆம் நிலை வீராங்கனை எலியா ஸ்விற்றொலினா, 4ஆம் நிலை வீராங்கனை நயோமி ஒசாகா, 1ஆம் நிலை வீராங்கனை சிமோனா ஹலெப் உள்ளிட்டோரும் கலந்துகொள்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .