Editorial / 2019 ஜனவரி 21 , பி.ப. 10:32 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கெதிரான டெஸ்ட் தொடருக்கான அவுஸ்திரேலியக் குழாமில் புதுமுக இளம் துடுப்பாட்டவீரர் கேர்ட்டிஸ் பட்டர்சன் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார்.
இலங்கைக்கெதிரான பயிற்சிப் போட்டியின் இரண்டு இனிங்ஸ்களிலும் சதங்களைப் பெற்றதைத் தொடர்ந்தே பட்டர்சன் அவுஸ்திரேலியக் குழாமில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.
அந்தவகையில், பட்டர்சனும் குழாமில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள நிலையில், ஜோ பேர்ண்ஸ், மற் றென்ஷோ, இன்னொரு புதுமுக இளம் துடுப்பாட்டவீரர் வில் புகொவ்ஸ்கி ஆகியோருடன் பீற்றர் ஹன்ட்ஸ்கொம்ப்பும் ஷோன் மார்ஷும் குழாமிலிருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், துடுப்பாட்டவரிசையில் இரண்டு இடங்களுக்காக பட்டர்சனும் போட்டியிடுகின்றார்.
அவுஸ்திரேலிய, இலங்கையணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், பிறிஸ்பேணில் இலங்கை நேரப்படி எதிர்வரும் வியாழக்கிழமை ஆரம்பமாகவுள்ள பகலிரவு டெஸ்ட் போட்டியுடன் ஆரம்பிக்கின்றது.
20 minute ago
06 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
06 Apr 2026