Shanmugan Murugavel / 2021 ஓகஸ்ட் 19 , மு.ப. 10:18 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடருக்கான அவுஸ்திரேலியக் குழாமில் விக்கெட் காப்பாளர் ஜொஷ் இங்லிஸ் இடம்பெற்றுள்ளார்.
அவுஸ்திரேலியக் குழாமில் இங்லிஸ் இடம்பெறுவது இதுவே முதற்தடவையாகும்.
இந்நிலையில், டேவிட் வோணர், ஸ்டீவ் ஸ்மித், கிளென் மக்ஸ்வெல், மார்க்கஸ் ஸ்டொய்னிஸ், பற் கமின்ஸ், கேன் றிச்சர்ட்ஸன் ஆகியோர் குழாமுக்குத் திரும்பியுள்ளனர்.
இதேவேளை, டான் கிறிஸ்டியன், நாதன் எலிஸ், டேனியல் சாம்ஸ் ஆகியோர் மேலதிக வீரர்களாக இடம்பெற்றுள்ளனர்.
குழாம்: ஆரோன் பின்ஞ் (அணித்தலைவர்), டேவிட் வோணர், ஸ்டீவ் ஸ்மித், கிளென் மக்ஸ்வெல், மிற்செல் மார்ஷ், மத்தியூ வேட், அஸ்தன் அகர், பற் கமின்ஸ், மிற்செல் ஸ்டார்க், கேன் றிச்சர்ட்ஸன், அடம் ஸாம்பா, ஜொஷ் ஹேசில்வூட், மார்க்கஸ் ஸ்டொய்னிஸ், மிற்செல் ஸ்வப்ஸன், ஜொஷ் இங்லிஸ்.
மேலதிக வீரர்கள்: டான் கிறிஸ்டியன், நாதன் எலிஸ், டேனியல் சாம்ஸ்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .