2024 ஏப்ரல் 28, ஞாயிற்றுக்கிழமை

அவுஸ்திரேலியக் குழாமில் ஸ்டொய்னிஸ் இல்லை

Mithuna   / 2024 ஜனவரி 11 , பி.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடருக்கான அவுஸ்திரேலியக் குழாமில் மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் இடம்பெறவில்லை.

இதேவேளை முதற்தடவையாக ஒருநாள் சர்வதேசப் போட்டிக் குழாமில் வேகப்பந்துவீச்சாளர் லான்ஸ் மொரிஸ் இடம்பெற்றுள்ளார்.

அணித்தலைவர் பற் கமின்ஸ், மிற்செல் ஸ்டார்க், ஜொஷ் ஹேசில்வூட், மிற்செல் மார்ஷுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ள நிலையில் அணிக்கு ஸ்டீவன் ஸ்மித் தலைமை தாங்கவுள்ளார்.

இதேவேளை குழாமில் வேகப்பந்துவீச்சாளர் ஜஹை றிச்சர்ட்ஸன் மீள அழைக்கப்பட்டுள்ளதோடு, சகலதுறைவீரர்கள் ஆரோன் ஹார்டி, மற் ஷோர்ட், வேகப்பந்துவீச்சாளர் நாதன் எலிஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

குழாம்: ஸ்டீவ் ஸ்மித் (அணித்தலைவர்), ஷோன் அபொட், நாதன் எலிஸ், கமரோன் கிறீன், ஆரோன் ஹார்டி, ட்ரெவிஸ் ஹெட் (உப அணித்தலைவர்), ஜொஷ் இங்லிஸ் (விக்கெட் காப்பாளர்), மர்னுஸ் லபுஷைன், கிளென் மக்ஸ்வெல், லான்ஸ் மொரிஸ், ஜஹை றிச்சர்ட்ஸன், மற் ஷோர்ட், அடம் ஸாம்பா.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .