2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

அவுஸ்திரேலியத் தொடரிலும் மத்தியூஸ் இல்லை?

Editorial   / 2018 டிசெம்பர் 30 , பி.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையணியின் முன்னாள் தலைவரான அஞ்சலோ மத்தியூஸ், தனது இடதுகாலில் இரண்டாம் நிலை பின்தொடைதசைநார் உபாதைக்குள்ளாகியுள்ளதாக ஸ்கான்களில் வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நியூசிலாந்துக்கெதிரான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடர்களைத் தவறவிடுவது மாத்திரமில்லாமல் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள அவுஸ்திரேலியாவுக்கெதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரையும் தவறவிடுவார் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

நேற்று முடிவடைந்த நியூசிலாந்துக்கெதிரான இரண்டாவது டெஸ்டின் நேற்று முன்தின நான்காம் நாளிலேயே தமது இரண்டாவது இனிங்ஸில் ஓட்டமொன்றைப் பூர்த்தி செய்கையிலேயே மத்தியூஸ் உபாதைக்குள்ளாகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .