2025 மே 02, வெள்ளிக்கிழமை

அவுஸ்திரேலியாவுக்கெதிரான முதலாவது டெஸ்டைத் தவறவிடும் றோஹித்

Shanmugan Murugavel   / 2024 நவம்பர் 18 , பி.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவுக்கெதிரான முதாலவது டெஸ்டில் இந்திய அணித்தலைவர் றோஹித் ஷர்மா பங்கேற்க மாட்டார்.

தனது இரண்டாவது பிள்ளையின் பிறப்புக்காக இந்தியாவிலிருக்கும் றோஹித், இரண்டாவது டெஸ்டுக்கு முன்பாக குழாமுடன் இணைந்து கொள்ளவுள்ளார்.

இந்நிலையில் ஜஸ்பிரிட் பும்ரா இந்தியாவுக்குத் தலைமை தாங்கள்ளார்.

றோஹித்தை லோகேஷ் ராகுல் அணியில் பிரதியிடுவாரென எதிர்பார்க்கப்படுகிறது.

ராகுல், ஷுப்மன் கில்லைப் பிரதியிடுவாரென எதிர்பார்க்கப்படும் அபிமன்யு ஈஸ்வரன் அண்மைய போட்டிகளில் பெரிதாகப் பிரகாசிக்காத நிலையில் துடுப்பாட்ட சகலதுறைவீரரான நிதிஷ் குமார் ரெட்டி அல்லது பந்துவீச்சு சகலதுறைவீரர் ஹர்ஷித் ரானாவை அணியில் சேர்ப்பதன் மூலம் துடுப்பாட்டத்தைப் பலப்படுத்த முயலுமென எதிர்பார்க்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X