Shanmugan Murugavel / 2024 நவம்பர் 21 , பி.ப. 08:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய, இந்திய அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது பேர்த்தில் நாளை காலை 7.50 மணிக்கு தொடங்கவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கின்றது.
நியூசிலாந்துடனான தொடரில் வெள்ளையடிக்கப்பட்ட பின்னர் சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கு தகுதி பெறுவதற்கு இத்தொடரின் நான்கு போட்டிகளில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்தியா களமிறங்குகிறது.
மறுபக்கமாக கடந்த இரண்டு முறையும் இந்தியாவிடம் தொடரைப் பறிகொடுத்த அவுஸ்திரேலியா அதற்கு பழி தீர்க்கும் நோக்கில் களமிறங்குகின்றது.
இப்போட்டிக்கான ஆடுகளமானது பழைய பேர்த் ஆடுகளங்களைப் போல வேகமானதாகவும், எகிறி வரும் பவுண்ஸ்களையும் வழங்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இம்மைதானதில் அவுஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர்களை விட நேதன் லையன் சிறப்பாக பெறுதிகளைக் கொண்டிருக்கும் நிலையில் இரவிச்சந்திரன் அஷ்வினும் அவதானிக்கப்படுவார்.
இந்திய அணியைப் பொறுத்த வரையில் அணித்தலைவர் றோஹித் ஷர்மாவுக்குப் பதில் லோகேஷ் ராகுல் ஆரம்பத் துடுப்பாட்டவீரராக களமிறங்குவாரென எதிர்பார்க்கப்படுவதுடன், மூன்றாமிடத்தில் தேவ்டுட் படிக்கல் களமிறங்குவாரென எதிர்பார்க்கப்படுகின்றது.
இது தவிர ஆறாமிடத்தில் துருவ் ஜுரேலும், ஏழாமிடத்தில் நிதிஷ்குமார் ரெட்டியும் தொடர்ந்து அஷ்வின் அதையடுத்து ஹர்ஷித் ரான, ஜஸ்பிரிட் பும்ரா, மொஹமட் சிராஜ் களமிறங்குவரென எதிர்பார்கப்படுகிறது.
அவுஸ்திரேலிய அணியில் மிற்செல் மார்ஷ் பந்துவீசுவாரென உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மர்னுஸ் லபுஷைனும் பணிச்சுமையை பகிர்ந்து கொள்வாரெனத் தெரிகிறது.
8 minute ago
37 minute ago
46 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
37 minute ago
46 minute ago
48 minute ago