2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

ஆசிய ஆடவர் மல்யுத்த சம்பியன்ஷிப்பில் சிவானந்தாவின் ஹரிபிரசாத்

Shanmugan Murugavel   / 2024 ஜூலை 22 , பி.ப. 02:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

தாய்லாந்தில்ல் நடைபெறவுள்ள ஆசிய ஆடவர்  மல்யுத்த சம்பியன்ஷிப்பில் மட்டக்களப்பு  சிவானந்தா தேசிய பாடசாலை மாணவன் கிருஷ்ணகுமார் ஹரிபிரசாத் பங்குபற்றவுள்ளார். இதனை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் மாணவனுக்கு பாராட்டுகளை தெரிவித்தார்.

அத்துடன்  மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து சிவானந்தா தேசிய பாடசாலையில்  உயர்தரத்தில்  இறுதி ஆண்டில் கல்வி பயிலும்  மாணவன் கிருஷ்ணகுமார் ஹரிபிரசாத் மாணவனுக்கு  மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஶ்ரீகாந்த் ,உதவி மாவட்ட செயலாளர் ஜி. பிரணவன் ,பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஜதிஸ்குமார் மற்றும் பிரதேச செயலாளர் வி.வாசுதேவன் ஆகியோர் தமது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

இலங்கை மல்யுத்த சம்மேளனம் நடாத்திய மல்யுத்த தெரிவுப் போட்டியில்
 57 கிலோ கிராம் இடைப்பிரிவில்   வென்றே இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஹரிபிரசாத்  செல்லவுள்ளமை  குறிப்பிடத்தக்கது.

மாணவனுக்கு மல்யுத்த நுப்பங்களை திருசச்செல்வம் ஆசிரியர் வழங்கி வருகின்றமை  குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .