2025 நவம்பர் 07, வெள்ளிக்கிழமை

ஆசியக் கிண்ண சர்ச்சை: றாஃப்புக்கு 2 போட்டிகள் தடை

Shanmugan Murugavel   / 2025 நவம்பர் 05 , பி.ப. 02:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் தடையொன்றை பாகிஸ்தானின் ஹரிஸ் றாஃப் எதிர்கொள்கின்ற நிலையில், தென்னாபிரிக்காவுக்கெதிரான முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியைத் தவறவிட்டதுடன், இரண்டாவது போட்டியையும் தவறவிடவுள்ளார்.

ஆசியக் கிண்ணத்தில் இந்தியாவுக்கெதிரான போட்டிகளின்போது இரண்டு வெவ்வேறான குற்றச்சாட்டுகளுக்காக நான்கு தண்டப் புள்ளிகளை றாஃப் பெற்றிருந்தார்.

இதேவேளை இந்திய அணித்தலைவர் சூரியகுமார் யாதவ்வுக்கு இரண்டு தண்டப் புள்ளிகளைப் பெற்றதோடு, பாகிஸ்தானின் சஹிப்ஸடா பர்ஹான் மற்றும் இந்தியாவின் ஜஸ்பிரிட் பும்ரா ஆகியோர் ஒரு தண்டப் புள்ளியைப் பெற்றிருந்தார்.

இந்தியாவின் அர்ஷ்டீப் சிங் குற்றமற்றவராக அடையாங் காணப்பட்டிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X