2025 மே 19, திங்கட்கிழமை

ஆசியக் கிண்ணம்: இந்தியாவும் சுப்பர் 4-க்குள் நுழைந்தது

Shanmugan Murugavel   / 2022 செப்டெம்பர் 01 , பி.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆசியக் கிண்ணத் தொடரின் சுப்பர் 4 சுற்றுக்குள் நடப்புச் சம்பியன்களான இந்தியாவும் நுழைந்தது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் டுபாயில் நேற்றிரவு நடைபெற்ற ஹொங் கொங்குடனான குழு ஏ போட்டியில் வென்றமையைத் தொடர்ந்தே சுப்பர் 4-க்குள் இந்தியா நுழைந்துள்ளது.

இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற ஹொங் கொங்கின் அணித்தலைவர் நிஸகட் கான், தமதணி முதலில் களத்தடுப்பிலீடுபடும் என அறிவித்தார். இந்தியா சார்பாக கடந்த போட்டியில் விளையாடிய ஹர்டிக் பாண்டியாவுக்கு ஓய்வளிக்கப்பட்டு அவருக்குப் பதிலாக றிஷப் பண்ட் அணியில் இடம்பெற்றிருந்தார்.

அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா நிதானமான ஆரம்பத்தைப் பெற்ற நிலையில் 21 (13) ஓட்டங்களுடன் அணித்தலைவர் றோஹித் ஷர்மா வீழ்ந்தார். பின்னர் மெதுவாகத் துடுப்பெடுத்தாடிய லோகேஷ் ராகுலும் 36 (39) வீழ்ந்தபோதும், சூரியகுமார் யாதவ்வின் ஆட்டமிழக்காத 68 (26), விராட் கோலியின் ஆட்டமிழக்காத 59 (44) ஓட்டங்களோடு 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 192 ஓட்டங்களை இந்தியா பெற்றது.  பந்துவீச்சில், அயுஷ் ஷுக்லா 1/29 [4], எஹஸன் கான் 0/26 [4], யசிம் முர்டஸா 0/27 [4] என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.

பதிலுக்கு 193 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய ஹொங் கொங் சார்பாக பாபர் ஹயாட் 41 (35), கிஞ்சிட் ஷா 30 (28), ஸீஷன் அலி ஆட்டமிழக்காமல் 26 (17), ஸ்கொட் மக்கெச்னி ஆட்டமிழக்காமல் 16 (08) ஓட்டங்களைப் பெற்றபோதும் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 152 ஓட்டங்களையே பெற்ற அவ்வணி 40 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. பந்துவீச்சில், இரவீந்திர ஜடேஜா 1/15 [4], புவ்னேஷ்வர் குமார் 1/15 [4], யுஸ்வேந்திர சஹால் 0/18 [4], விராட் கோலி 0/6 [1] என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.

இப்போட்டியின் நாயகனாக சூரியகுமார் யாதவ் தெரிவானார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X