Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 செப்டெம்பர் 06 , பி.ப. 03:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆசியக் கிண்ணத் தொடரின் சுப்பர் – 4 சுற்றுக்கு இலங்கை தகுதி பெற்றுள்ளது.
லாகூரில் செவ்வாய்க்கிழமை (05) நடைபெற்ற ஆப்கானிஸ்தானுடனான போட்டியில் வென்றமையைத் தொடர்ந்தே சுப்பர் – 4 சுற்றுக்கு நடப்புச் சம்பியன்களான இலங்கை தகுதி பெற்றுள்ளது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை, குசல் மென்டிஸின் 92 (84), டுனித் வெல்லலாகேவின் ஆட்டமிழக்காத 33 (39), மகேஷ் தீக்ஷனவின் 28 (24) ஓட்டங்களோடு 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 291 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில் குல்படின் நைப் 4, ரஷீட் கான் 2, முஜீப் உர் ரஹ்மான் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
பதிலுக்கு 292 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்ட் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான், மொஹமட் நபியின் 65 (32), அணித்தலைவர் ஹஷ்மத்துலாஹ் ஷகிடியின் 59 (66), ரஷ்மத் ஷாவின் 45 (40),ரஷீட் கானின் ஆட்டமிழக்காத 27 (16), நஜிபுல்லா ஸட்ரானின் 23 (15), கரிம் ஜனட்டின் 22 (13), நைப்பின் 22 (16) ஓட்டங்களோடு போராடியபோதும் 37.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 289 ஓட்டங்களையே பெற்று இரண்டு ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
இப்போட்டியின் நாயனாக மென்டிஸ் தெரிவானார்.
இந்நிலையில், கொழும்பில் இன்று பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவுள்ள சுப்பர் 4 சுற்றுப் போட்டியில் பங்களாதேஷை இலங்கை எதிர்கொள்ளவுள்ளது.
1 hours ago
16 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
16 Oct 2025