2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

ஆண்டின் சிறந்த வீராங்கனையாக பெரி

Editorial   / 2019 டிசெம்பர் 18 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் ஆண்டின் சிறந்த வீராங்கனையாக, அவுஸ்திரேலியாவின் சகலதுறைவீராங்கனை எலைஸ் பெரி நேற்று  தெரிவாகியுள்ளார்.

இவ்வாண்டு 12 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 73.50 என்ற சராசரியில் ஓட்டங்களைப் பெற்றதுடன், 21 விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்த எலைஸ் பெரி, ஆண்டின் சிறந்த ஒருநாள் சர்வதேசப் போட்டி வீராங்கனையாகவும் தெரிவாகியிருந்தார்.

இதேவேளை, ஆண்டின் சிறந்த இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டி வீராங்கனையாக அவுஸ்திரேலியாவின் விக்கெட் காப்பாளர் அலைஸா ஹீலி தெரிவாகியிருந்தார்.

இந்நிலையில், வளர்ந்துவரும் வீராங்கனையாக தாய்லாந்தின் மிதவேகப் பந்துவீச்சாளர் சனிதா சுத்திருவாங் பெயரிடப்பட்டிருந்தார்.

இதேவேளை, ஆண்டின் ஒருநாள் சர்வதேசப் அணியினதும், இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டி அணியினதும் அணித்தலைவியாக அவுஸ்திரேலிய அணித்தலைவி மெக் லன்னிங் பெயரிடப்பட்டிருந்தார்.

ஒருநாள் சர்வதேசப் போட்டி அணி: 1. அலைஸா ஹீலி (விக்கெட் காப்பாளர்) – அவுஸ்திரேலியா, ஸ்மிருதி மந்தனா – இந்தியா, 3. தம்சின் பியூமொன்ட் – இங்கிலாந்து, 4. மெக் லன்னிங் (அணித்தலைவி) – அவுஸ்திரேலியா, 5. ஸ்டபனி டெய்லர் – மேற்கிந்தியத் தீவுகள், 6. எலைஸ் பெரி – அவுஸ்திரேலியா, 7. ஜெஸ் ஜொனாசென் – அவுஸ்திரேலியா, 8. ஷிகா பாண்டே – இந்தியா, 9. ஜுலான் கோஸ்வாமி – இந்தியா, 10. மேகன் ஸ்கட் – அவுஸ்திரேலியா, 11. பூனம் யாதவ் – இந்தியா.

இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டி அணி: 1. அலைஸா ஹீலி (விக்கெட் காப்பாளர்) – அவுஸ்திரேலியா, 2. டேனியலி வயாட் – இங்கிலாந்து, 3. மெக் லன்னிங் ( அணித்தலைவி) – அவுஸ்திரேலியா, 4. ஸ்மிருதி மந்தனா – இந்தியா, 5. லிஸெல்லி லீ – தென்னாபிரிக்கா, 6. எலைஸ் பெரி – அவுஸ்திரேலியா, 7. தீப்தி ஷர்மா – இந்தியா, 8. நிடா டார் – பாகிஸ்தான், 9. மேகன் ஸ்கட் – அவுஸ்திரேலியா, 10. ஷப்னிம் இஸ்மைல் – தென்னாபிரிக்கா, 11. ராதா யாதவ் – இந்தியா.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .