2024 மே 30, வியாழக்கிழமை

ஆப்கானிஸ்தானை வென்றது இலங்கை

Editorial   / 2023 ஜூன் 04 , பி.ப. 06:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் இலங்கை வென்றது.

மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியில் ஆப்கானிஸ்தான் வென்ற நிலையில், ஹம்பாந்தோட்டையில் நேற்று நடைபெற்ற இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கையின் அணித்தலைவர் தசுன் ஷானக, தமதணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார்.

அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை, குசல் மென்டிஸின் 78 (75), திமுத் கருணாரத்னவின் 52 (62), சதீர சமரவிக்கிரமவின் 44 (46), பதும் நிஸங்கவின் 43 (56), தனஞ்சய டி சில்வாவின் ஆட்டமிழக்காத 29 (24), வனிடு ஹஸரங்கவின் ஆட்டமிழக்காத 29 (12), ஷானகவின் 23 (13) ஓட்டங்களோடு 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 323 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில், மொஹமட் நபி, பரீட் அஹ்மட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், முஜீப் உர் ரஹ்மான், நூர் அஹ்மட் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு 324 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான், துஷ்மந்த சமீர (2), ஷானக, தன்ஞ்சய டி சில்வா (3), வனிடு ஹஸரங்க (3), மகேஷ் தீக்‌ஷனவிடம் விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 42.1 ஓவர்களில் 191 ஓட்டங்களையே பெற்று 132 ஓட்டங்களால் தோல்வியடைந்த்து, துடுப்பாட்டத்தில், அணித்தலைவர் ஹஷ்மத்துல்லாஹ் ஷகிடி 57 (62), இப்ராஹிம் ஸட்ரான் 54 (75), ரஹ்மத் ஷா 36 (42), அஸ்மத்துலாஹ் ஓமர்ஸாய் 28 (31) ஓட்டங்களைப் பெற்றனர். 

இப்போட்டியின் நாயகனாக தனஞ்சய  டி சில்வா தெரிவானார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .