2026 ஏப்ரல் 06, திங்கட்கிழமை

ஆர்சனல், நியூகஸ்டில் வெற்றி

Shanmugan Murugavel   / 2015 டிசெம்பர் 14 , மு.ப. 12:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

இடம்பெற்று வரும் இங்கிலாந்து பிறிமியர் லீக் போட்டிகளில் ஆர்சனல், நியூகஸ்டில் ஆகிய அணிகள் வெற்றி பெற்றதோடு, லிவர்பூல், வெஸ்ட் புரோம் அணிகளுக்கிடையிலான போட்டி சமநிலையில் முடிவடைந்துள்ளது.

ஆர்சனல் அணியானது அஸ்டன் விலாவை 2-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்திருந்தது. இதில், போட்டியின் எட்டாவது நிமிடத்தில் கிடைத்த பனால்டியை ஒலிவர் ஜிரோட் கோலாக்க, முன்னிலை பெற்ற ஆர்சனல் அணியானது, போட்டியின் 38ஆவது நிமிடத்தில் ஆரோன் ரம்ஸே பெற்ற கோலின் மூலம் தனது வெற்றியை உறுதிப்படுத்திக் கொண்டது. இந்த வெற்றியின் மூலம், இங்கிலாந்து பிறிமியர் லீக் புள்ளிகள் தரவரிசையில் முதலிடத்துக்கு ஆர்சனல் அணி சென்றுள்ளது.

அடுத்து, லிவர்பூல், வெஸ்ட் புரோம் அணிகளுக்கிடையிலான போட்டி 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்திருந்தது. போட்டியின் 21ஆவது நிமிடத்தில் லிவர்பூல் அணியின் ஜோர்டான் ஹெண்டர்சன் பெற்ற கோலின் மூலம் அவ்வணி முன்னிலை பெற்றது. எனினும் போட்டியின் 30ஆவது நிமிடத்தில் வெஸ்ட் புரோம் அணியின் கிரேய்க் டாசன் பெற்ற கோலின் மூலம் கோல் எண்ணிக்கை சமநிலையானது.

பின்னர், ஆட்டத்தின் 70ஆவது நிமிடத்தில் வெஸ்ட் புரோம் அணியின்  ஜோனாஸ் ஒல்ஸ்ஸன் பெற்ற கோலின் மூலம் அவ்வணி வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் போட்டியின் இறுதி நிமிடத்தில் ஆர்சனலின் டிவொக் ஒரிஜி பெற்ற கோலின் மூலம் போட்டி சமநிலையில் முடிவடைந்த்து.

தவிர, நியூகஸ்டில், டொட்டேன்ஹாம் அணிகளுக்கிடையிலான போட்டியில் நியூகஸ்டில் அணியானது 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .