Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 ஓகஸ்ட் 29 , பி.ப. 03:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆசியக் கிண்ணத் தொடரானது பாகிஸ்தானின் முல்தானில் அவ்வணிக்கும், நேபாளத்துக்கும் இடையே செவ்வாய்க்கிழமை (29) பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவுள்ள குழு ஏ போட்டியுடன் ஆரம்பிக்கிறது.
ஆறு அணிகள் பங்கேற்கும் இத்தொடரின் குழு ஏயின் இவ்விரண்டு அணிகள் தவிர இந்தியா இடம்பெற்றுள்ளதோடு, குழு பியில் நடப்புச் சம்பியன்களான இலங்கையுடன் பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகியன இடம்பெற்றுள்ளனர்.
குழுப் போட்டிகளில் தமது குழுவிலுள்ள ஏனைய அணியுடன் ஒரு முறை மோதி குழுவில் முதலிரண்டு இடங்களைப் பெறும் அணிகள் சுப்பர் 4 சுற்றுக்கு முன்னேறி அதில் முதலிரண்டு இடங்களையும் பெறும் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறவுள்ளன.
பாகிஸ்தானில் நான்கு போட்டிகளும், இலங்கையில் ஒன்பது போட்டிகளும் நடைபெறவுள்ள இத்தொடரில் இலங்கையணியானது காயம் காரணமாக துஷ்மந்த சமீர, வனிடு ஹஸரங்க, லஹிரு குமார, டில்ஷான் மதுஷங்க ஆகியோரை இழந்துள்ளமை பின்னடைவாகக் காணப்படுகிறது. தவிர, துடுப்பாட்டமானது பாரியளவு முன்னேற்றத்தைக் காண்பிக்க வேண்டியுள்ளது.
இந்தியாவைப் பொறுத்த வரையில் ஜஸ்பிரிட் பும்ரா, பிரசீத் கிருஷ்ணா, ஷ்ரேயாஸ் ஐயர், லோகேஷ் ராகுலின் மீள்வருகையானது நம்பிக்கையளித்தாலும் கிருஷ்ணா, மொஹமட் சிராஜ், குல்தீப் யாதவ் போன்ற அதிரடியாகத் துடுப்பெடுத்தாட முடியாத வீரர்களை பின்வரிசையில் கொண்டிருப்பது முன்வரிசை வீரர்களுக்கு அழுத்தத்தை வழங்குகின்றது.
பாகிஸ்தானைப் பொறுத்த வரையில் அனைத்து அணிகளுக்கும் சவாலளிக்கக் கூடிய அணியாகத் தோன்றுகின்றபோதும் அவ்வணியின் மத்தியவரிசை கவனம் பெறுகின்றது.
ஷகிப் அல் ஹஸன், மெஹிடி ஹஸன் மிராஸ் போன்ற சகலதுறைவீரர்களைக் கொண்டுள்ள பங்களாதேஷ் மேலதிகமாக துடுப்பாட்டவீரரையா அல்லது பந்துவீச்சாளரையா சேர்ப்பது என்பதில் தடுமாற்றத்தைக் கொண்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் அணியின் ரஷீட் கான், முஜீப் உர் ரஹ்மான் போன்றவர்கள் உள்ளபோதும் முக்கிய தருணங்களில் கோட்டை விடுகின்றமையை திருத்திக் கொண்டாலே அவ்வணி மேலும் முன்னேற வாய்ப்புக் காணப்படுகின்றது.
இம்முறையுடன் 16ஆவது தடவையாக ஆசியக் கிண்ணம் இடம்பெறுகின்ற நிலையில் அதிகபட்சமாக இந்தியா ஏழு தடவைகள் வென்றுள்ளது.
1 hours ago
16 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
16 Oct 2025