Shanmugan Murugavel / 2021 ஓகஸ்ட் 24 , பி.ப. 12:16 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் 16ஆவது பரா ஒலிம்பிக் போட்டிகளானவை இன்று ஆரம்பிக்கின்றன.
அடுத்த மாதம் ஐந்தாம் திகதி வரை நடைபெறவுள்ள இப்போட்டிகளில் 163 தேசங்களைச் சேர்ந்த 4,537 வீரர்கள் பங்கேற்கின்றனர். இதில், 22 வகையான விளையாட்டுக்களில் இருந்து 539 நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
கடந்தாண்டு நடைபெறவிருந்து கொரோனா பரவலால் ஒத்தி வைக்கப்பபட்ட இப்போட்டிகள் இம்முறை பார்வையாளர்கள் இல்லாமலே இடம்பெறவுள்ளன.
இம்முறை பூப்பந்தாட்டமும், டேக்வூன்டோவும் அறிமுகப்படுத்தப்பட்டு படகோட்டம், ஏழு நபர் கொண்ட கால்பந்தாட்டத்தைப் பிரதியிடவுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .