2025 ஜூலை 05, சனிக்கிழமை

ஆர்சனலை வென்று காலிறுதியில் லிவர்பூல்

Editorial   / 2019 ஒக்டோபர் 31 , பி.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான விலகல் முறையிலான இங்கிலாந்து கால்பந்தாட்ட லீக் கிண்ணத் தொடரின் காலிறுப் போட்டிக்கு லிவர்பூல், மன்செஸ்டர் யுனைட்டெட், அஸ்டன் வில்லா ஆகியன தகுதிபெற்றுள்ளன.

தமது மைதானத்தில் இன்று அதிகாலை நடபெற்ற ஆர்சனலுடனான நான்காவது சுற்றுப் போட்டியில் பெனால்டியில் வென்றே காலிறுதிப் போட்டிக்கு லிவர்பூல் தகுதிபெற்றிருந்தது. முன்னதாக வழமையான நேரத்தில் 5-5 என்ற கோல் கணக்கில் போட்டி சமநிலையில் முடிவடைந்திருந்தது.

லிவர்பூல் சார்பாக, டிவோக் ஒரிஜி இரண்டு கோல்களையும், ஜேம்ஸ் மில்னர், அலெக்ஸ் ஒக்ஸ்லெட்-சம்பர்லின் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலையும் பெற்றிருந்த நிலையில், ஓவ்ண் கோல் முறையில் ஒரு கோல் கிடைக்கப் பெற்றிருந்தது. ஆர்சனல் சார்பாக, கப்ரியல் மார்டினெல்லி இரண்டு கோல்களையும், லூகாஸ் டொரெய்ரா, ஐன்ஸ்லி மைட்லான்ட்-நீல்ஸ், ஜோ வில்லொக் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

பெனால்டியில் 5-4 என்ற ரீதியில் லிவர்பூல் வென்றிருந்தது. லிவர்பூல் சார்பாக, ஜேம்ஸ் மில்னர், அடம் லலானா, றிஹியன் ப்ரூஸ்டர், டிவோக் ஒரிஜி, கேர்ட்டிஸ் ஜோன்ஸ் ஆகியோர் தமது பெனால்டிகளை உட்செலுத்தியிருந்தனர். ஆர்சனல் சார்பாக, ஹெக்டர் பெல்லரின், மட்டியோ குன்டோஸீ, கப்ரியல் மார்டினெல்லி, ஐன்ஸ்லி மெய்ட்லான்ட்-நைல்ஸ் ஆகியோர் தமது பெனால்டிகளை உட்செலுத்தியிருந்த நிலையில், டனி செபலோஸின் பெனால்டியை லிவர்பூலின் கோல் காப்பாளர் கவோய்ம்ஹின் கெல்லெஹெர் தடுத்திருந்தார்.

இந்நிலையில், செல்சியின் மைதானத்தில் இன்று  அதிகாலை நடைபெற்ற அவ்வணியுடனான நான்காவது சுற்றுப் போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் வென்றே காலிறுதிப் போட்டிக்கு மன்செஸ்டர் யுனைட்டெட் தகுதிபெற்றிருந்தது. மன்செஸ்டர் யுனைட்டெட் சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் மார்க்கஸ் றஷ்ஃபோர்ட் பெற்றிருந்தார். செல்சி சார்பாகப் பெறப்பட்ட கோலை மிச்சி பச்சுவாய் பெற்றிருந்தார்.

இதேவேளை, தமது மைதானத்தில் இன்று  அதிகாலை நடைபெற்ற வொல்வர்ஹம்ப்டன் வொன்டரேர்ஸுடனான நான்காவது சுற்றுப் போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் வென்ற அஸ்தன் வில்லா காலிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றது. அஸ்தன் வில்லா சார்பாக, அன்வர் எல் கஸி, அஹ்மட் எல்மொஹமடி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றிருந்தனர். வொல்வர்ஹம்ப்டன் வொன்டரேர்ஸ் சார்பாகப் பெறப்பட்ட கோலை பற்றிக் குர்துன்னே பெற்றிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .