2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

ஆர்சனலை வென்று சம்பியனானது மன்செஸ்டர் சிற்றி

Editorial   / 2018 பெப்ரவரி 26 , பி.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான விலகல் முறையிலான இங்கிலாந்து கால்பந்தாட்ட லீக் கிண்ணத் தொடரில் மன்செஸ்டர் சம்பியனானது.  வெம்ப்ளி அரங்கில் நேற்று இடம்பெற்ற இறுதிப் போட்டியில் ஆர்சனலை வென்றே மன்செஸ்டர் சிற்றி சம்பியனானது.

இப்போட்டியில், மன்செஸ்டர் சிற்றியின் கோல் காப்பாளர் கிளாடியோ பிராவோ உதைத்த உதையை ஆர்சனலின் பின்கள வீரர் ஸ்கொட்ரான் முஸ்டாபி தவறவிட பந்தைக் கைப்பற்றிய சேர்ஜியோ அகுரோ, ஆர்சனலின் கோல் காப்பாளர் டேவிட் ஒஸ்பினாவுக்கு மேலால் பந்தைச் செலுத்தி கோலாக்கி போட்டியின் 18ஆவது நிமிடத்தில் மன்செஸ்டர் சிற்றிக்கு முன்னிலையை வழங்கினார்.

பின்னர், இல்கி குன்டோகடமிருந்து வந்த பந்தை போட்டியின் 58ஆவது நிமிடத்தில் கோலாக்கிய மன்செஸ்டர் சிற்றியின் அணித்தலைவர் வின்சென்ட் கொம்பனி தனது அணியின் முன்னிலையை இரட்டிப்பாக்கினார். இதையடுத்து போட்டியின் 65ஆவது நிமிடத்தில் டேவிட் சில்வா பெற்ற கோலுடன் 3-0 என்ற கோல் கணக்கில் வென்ற மன்செஸ்டர் சிற்றி சம்பியனானது.

அந்தவகையில், 2016-17ஆம் ஆண்டு பருவகாலத்தில் மன்செஸ்டர் சிற்றியின் முகாமையாளராகப் பொறுப்பேற்ற பெப் குவார்டிலோ வெல்லும் முதலாவது பட்டம் இதுவாகும்.

இதேவேளை, இம்முறையுடன் சேர்த்து இங்கிலாந்து கால்பந்தாட்ட லீக் கிண்ணத்தை ஐந்தாவது தடவையாக மன்செஸ்டர் சிற்றி வென்றுள்ளது. மன்செஸ்டர் சிற்றியை விட லிவர்பூல் மாத்திரமே அதிக தடவைகளாக எட்டுத் தடவைகள் வென்றுள்ளது.

இந்நிலையில், விகன் அத்லெட்டிக்கிடம் தோற்று இங்கிலாந்து கால்பந்தாட்ட சங்க சவால் கிண்ணத் தொடரிலிருந்து வெளியேறிய மன்செஸ்டர் சிற்றிக்கு இப்போட்டி சிறந்ததொரு மீள்வருகையாக அமைந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .