Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 நவம்பர் 09 , பி.ப. 09:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆர்ஜென்டீனா தேசிய கால்பந்தாட்ட அணியில் பிரதான முடிவுகளை தான் எடுப்பதாகக் கூறுவது தன்னை ஆத்திரமூட்டுவதாக, ஆர்ஜென்டீனா தேசிய கால்பந்தா அணியினதும் ஸ்பானியக் கழகமான பார்சிலோனாவினது முன்கள வீரரான லியனல் மெஸ்ஸி தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் இடம்பெற்ற கால்பந்தாட்ட உலகக் கிண்ணத்தின் இறுதிச் சுற்று தகுதிகாண் போட்டியில் மூன்று கோல்களைப் பெற்று, உலக் கிண்ணத்துக்கு ஆர்ஜென்டீனா தகுதிபெறுவதை உறுதிசெய்த மெஸ்ஸி, பயிற்சியாளர்களைத் தெரிவுசெய்வதாகவும் கடந்த காலங்களில், குழாமில் யார் இடம்பெறுவது, இடம்பெறக்கூடாது என்பதில் தாக்கம் செலுத்துவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
இந்நிலையில், கருத்துத் தெரிவித்த மெஸ்ஸி, தன்னைப் பற்றிய நகைப்புக்கிடமான கருத்துகளை விமர்சித்ததுடன் பல விடயங்கள் மிக இலகுவாகக் கூறப்படுவதாக கூறியிருந்தார். எதையும் அறியாமல் கருத்துகள் வெளிப்படுத்தப்படுவதாகவும் இதனால் ஆத்திரமடைவதாகவும் தெரிவித்த மெஸ்ஸி, ஆனால் இவற்றுக்கெல்லாம் பழக்கப்பட்டு விட்டதாகக் கூறியுள்ளார்.
எவ்வாறெனினும் குறித்த கருத்துகள் தனக்கு மட்டுமல்லாது, தனது சக ஆர்ஜென்டீனா தேசிய கால்பந்தாட்ட வீரர்களுக்கும் மரியாதைக் குறையை அளிப்பதாக மெஸ்ஸி தெரிவித்துள்ளார்.
தேசிய கால்பந்தாட்ட அணியில், தான் விரும்பிய நண்பர்கள் மற்றும் பயிற்சியாளர்களை இடுகிறேன் என்பது பொய் எனத் தெரிவித்த மெஸ்ஸி, தான் அணியில் மேலுமொரு வீரர் மாத்திரமே என்று கூறியுள்ளார்.
ரஷ்யாவில் அடுத்தாண்டு இடம்பெறவுள்ள உலகக் கிண்ணத்துக்கான தகுதிகாண் போட்டிகளிலேயே, உலகக் கிண்ணத்தில் ஆர்ஜென்டீனா உறுதி செய்த நிலையில், தகுதிகாண் போட்டிகள் முழுவதும் குறித்த விமர்சனனம் முன்வைக்கப்பட்டிருந்தது.
மெஸ்ஸிக்கு 30 வயது என்பதுடன் ஸ்கேவியர் மஷரானோவுக்கு 33 வயது, ஏஞ்சல் டி மரியா, கொன்ஸலோ ஹியூகைன் ஆகியோருக்கு 29 வயது என்ற நிலையில், தற்போதுள்ள குழாமை வைத்துக் கொண்டு, ஆர்ஜென்டீனா உலகக் கிண்ணத்தை வெல்லுவதற்கான இறுதிச் சந்தர்ப்பமாக ரஷ்யா இருக்கிறது.
37 minute ago
20 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
20 Jul 2025