Editorial / 2019 நவம்பர் 04 , பி.ப. 07:12 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஆறாவது தடவையாக போர்மியுலா வண் உலக சம்பியனாக, பிரித்தானியாவின் லூயிஸ் ஹமில்டன் முடிசூடியுள்ளார். இன்று அதிகாலை நடைபெற்ற ஐக்கிய அமெரிக்க குரான் பிறீயில் இரண்டாமிடத்தைப் பெற்றதைத் தொடர்ந்தே, இன்னும் இரண்டு பந்தயங்கள் இருக்கையிலேயே இவ்வாண்டுக்கான போர்மியுலா வண் சம்பியனாக நடப்புச் சம்பியனான மெர்சிடீஸ் அணியின் ஹமில்டன் முடிசூடியிருந்தார்.
அந்தவகையில், அதிக தடவைகள் போர்மியுலா வண் சம்பியன்ஷிப் பட்டங்களை வென்ற ஜேர்மனியின் மைக்கல் ஷுமாக்கரைச் சமப்படுத்துவதற்கு இன்னும் ஒரு பட்டத்தையே ஹமில்டன் பெற வேண்டியுள்ளது.
குறித்த பந்தயத்தில் முதலாமிடத்திலிருந்து ஆரம்பித்த ஹமில்டனின் சக மெர்சிடீஸ் அணியின் பின்லாந்து ஓட்டுநரான வல்ட்டேரி போத்தாஸ் முதலிடம் பெற்றிருந்தார்.
பந்தயத்தை ஐந்தாமிடத்திலிருந்தே ஆரம்பித்த ஹமில்டன், முதலாவது சுற்றிலேயே பந்தயத்தை நான்காமிடத்திலிருந்து ஆரம்பித்த பெராரி அணியின் மொனாக்கோ ஓட்டுநரான சார்ள்ஸ் லெக்கலெர்க்கையும், இரண்டாமிடத்திலிருந்து ஆரம்பித்த ஜேர்மனிய ஓட்டுநர் செபஸ்டியன் வெட்டலையும் முந்தி, போத்தாஸ் மற்றும் பந்தயத்தை மூன்றாமிடத்திலிருந்து ஆரம்பித்த றெட் புல் அணியின் நெதர்லாந்து ஓட்டுநரான மக்ஸ் வெர்ஸ்டபனுக்கு அடுத்ததாக மூன்றாமிடத்தில் ஹமில்டன் காணப்பட்டிருந்தார்.
இந்நிலையில், வெர்ஸ்டப்பனும், போத்தாஸும் முதலில் தமது டயர்களை மாற்றுவதற்காக சென்றபோது முதலிடத்தில் காணப்பட்டிருந்த ஹமில்டன், மீண்டும் அவர்கள் இரண்டாவது தடவையாக டயர்களை மாற்றுவதற்காகச் சென்றபோதும் முதலாமிடத்தில் காணப்பட்டிருந்தார்.
அந்தவகையில், ஒரு தடவை மாத்திரமே டயர்களை மாற்றியிருந்த ஹமில்டனை மூன்று சுற்றுக்கள் இருக்கத் தக்கதாக போத்தாஸ் முந்தியிருந்த நிலையில், வெர்ஸ்டப்பனை முந்த விடாமல் செய்து இரண்டாமிடத்தை ஹமில்டன் பெற்றிருந்தார். மூன்றாமிடத்தை வெர்ஸ்டப்பனும், நான்காமிடத்தை லெக்கலெர்க்கும், ஐந்தாமிடத்தை றெட் புல் அணியின் தாய்லாந்து ஓட்டுநரான அலெக்ஸான்டர் அல்போனும் பெற்றிருதனர். காரில் இடம்பெற்ற பிரச்சினை காரணமாக எட்டாவது சுற்றிலேயே வெட்டல் விலகியிருந்தார்.
4 hours ago
9 hours ago
27 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
9 hours ago
27 Jan 2026