Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Editorial / 2019 நவம்பர் 01 , மு.ப. 04:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை, அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டி மெல்பேணில் இலங்கை நேரப்படி இன்று நண்பகல் 1.40க்கு ஆரம்பிக்கவுள்ளது.
மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் தோற்று தொடரை ஏற்கெனவே இலங்கை இழந்துள்ளது. எனினும், சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரானது அடுத்தாண்டு அவுஸ்திரேலியாவிலேயே நடைபெறவுள்ள நிலையில் இத்தொடரானது நிச்சயம் அனுபவத்தை வழங்கும்.
அந்தவகையில், தொடரானது ஏற்கெனவே இழக்கப்பட்டுள்ள நிலையில் தமது குழாமிலுள்ள இத்தொடரில் பயன்படுத்தப்படாத வீரர்களான ஷெகான் ஜெயசூரிய, லஹிரு குமார ஆகியோர் வனிடு ஹசரங்க, நுவான் பிரதீப் மூலமாக பிரதியிடப்பட்டு பரிசோதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன.
இந்நிலையில், இலங்கையின் துடுப்பாட்டமே பிரச்சினைக்குரியதாகக் காணப்படுகின்றபோதும் இரண்டாவது போட்டியில் விளையாடிய அதே துடுப்பாட்டவரிசையே மீண்டும் களமிறங்கக்கூடிய சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன.
இதேவேளை, அவுஸ்திரேலியாவில் உளநலப் பிரச்சினை காரணமாக கிரிக்கெட்டிலிருந்து விடுப்புப் பெற்றுள்ள சகலதுறைவீரர் கிளென் மக்ஸ்வெல்லுக்குப் பதிலாக டார்சி ஷோர்ட் அவரை குழாமில் பிரதியிட்டுள்ளபோதும், அணியில் அவரை ஏற்கெனவே குழாமிலுள்ள பென் மக்டர்மூட்டே பிரதிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதுதவிர, வேகப்பந்துவீச்சாளர் மிற்செல் ஸ்டார்க்கும் குழாமுக்கு மீளத் திரும்பியுள்ள நிலையில் அவர் அணியில் பற் கமின்ஸை பிரதியிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அந்தவகையில், அவுஸ்திரேலிய அணி பலமானதாக வெள்ளையடிப்பை மேற்கொள்ளக்கூடிய சந்தர்ப்பங்களே காணப்படுகின்ற நிலையில், ஆறுதல் வெற்றியொன்றை இலங்கை பெற்றுக் கொள்வதற்கு அணித்தலைவர் லசித் மலிங்க, குசல் பெரேரா, நிரோஷன் டிக்வெல்ல ஆகியோரிடமிருந்து அபாரமான பெறுபேறுகள் எதிர்பார்க்கப்படுகின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
04 Jul 2025