2025 ஜூலை 21, திங்கட்கிழமை

ஆஷஸின் முதல் நாளில் 2 அணிகளும் போராட்டம்

Editorial   / 2017 நவம்பர் 23 , பி.ப. 02:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர், பிறிஸ்பேணில் இன்று ஆரம்பித்த முதலாவது போட்டியுடன் ஆரம்பித்தது.

இன்றைய முதல் நாள் ஆட்ட முடிவில், தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடி வருகின்ற இங்கிலாந்து, 4 விக்கெட்டுகளை இழந்து 196 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. தற்போது களத்தில், டேவிட் மலன் 28, மொயின் அலி 13 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனர். முன்னதாக, ஜேம்ஸ் வின்ஸ் 83, மார்க் ஸ்டோன்மன் 53 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். பந்துவீச்சில், பற் கமின்ஸ் 2, மிற்செல் ஸ்டார்க் 1 விக்கெட்டைக் கைப்பற்றினர்.

இன்றைய முதல் நாள் மதிய நேர இடைவேளையைத் தொடர்ந்து மழை பெய்ததனால், ஆட்டம் வழமையாக முடிவுறும் நேரம் நீடிக்கப்பட்டிருந்தாலும் போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் இடைநிறுத்தப்பட 80.3 ஓவர்கள் மாத்திரமே வீசக் கூடியதாய் இருந்தது. அந்தவகையில், நாளைய  இரண்டாம் நாள் ஆட்டம் அரை மணித்தியாலம் முன்பதாக, அதாவது நாளை அதிகாலை ஐந்து மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.

இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணியின் தலைவர் ஜோ றூட்டே தமது அணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார். இரண்டு அணிகளும் தாம் நேற்று அறிவித்த அணிகளையே களமிறக்கியிருந்தன. அவுஸ்திரேலியாவின் உப அணித்தலைவரும் ஆரம்பத் துடுப்பாட்ட வீரருமான டேவிட் வோணர், சிரேஷ்ட துடுப்பாட்ட வீரர் ஷோர்ன் மார்ஷ் ஆகியோர் உபாதைகளைக் கொண்டிருந்தபோதும் போட்டியின் பங்கேற்பதற்கான உடற்றகுதியைப் பெற்றிருந்தனர்.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X