Shanmugan Murugavel / 2026 பெப்ரவரி 13 , பி.ப. 06:49 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், டெல்லியில் தற்போது முடிவுக்கு வந்த கனடாவுக்கெதிரான குழு ஏ போட்டியில் ஐக்கிய அரபு அமீரகம் வென்றது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கனடா, ஹர்ஷ் தாக்கரின் 50 (41), நவ்னீட் தலிவாலின் 34 (28), ஷ்ரேயாஸ் மொவ்வாவின் 21 (21) ஓட்டங்களுடன் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 150 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில் ஜுனைட் சித்திக் 4-0-35-5, முஹமட் ஜவடுல்லா 4-0-16-1, ஹைதர் அலி 4-0-29-0 என்ற பெறுபேறுகளைக் கொண்டிருந்தனர்.
பதிலுக்கு 151 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய ஐ.அ. அமீரகம், அர்யன்ஷ் ஷர்மாவின் ஆட்டமிழக்காத 74 (53), ஷொஹைப் கானின் 51 (29) ஓட்டங்களோடு 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது. பந்துவீச்சில் சாட் பின் ஸஃபார் 4-0-14-3, கலீம் சனா 4-0-29-1, டில்பிறீட் பஜ்வா 1-0-4-0 என்ற பெறுதியைக் கொண்டிருந்தனர்.
இப்போட்டியின் நாயகனாக ஜுனைட் சித்திக் தெரிவானார்.
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago