2026 பெப்ரவரி 17, செவ்வாய்க்கிழமை

இ – 20 உலகக் கிண்ணம்: சுப்பர் - 8 சுற்றுக்குத் தகுதி பெற்ற இங்கிலாந்து

Shanmugan Murugavel   / 2026 பெப்ரவரி 16 , பி.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் சுப்பர் - 8 சுற்றுக்கு இங்கிலாந்து தகுதி பெற்றது.

குழு சியில் ஏற்கெனவே நேபாளம், ஸ்கொட்லாந்தை ஏற்கெனவே வென்ற இங்கிலாந்து, கொல்கத்தாவில் தற்போது முடிவுக்கு வந்த  இத்தாலியுடனான போட்டியில் வென்றமையைத் தொடர்ந்தே சுப்பர் - 8 சுற்றுக்குத் தகுதி பெற்றது. 

இப்போட்டியில் முதலில் துடுபெடுத்தாடிய இங்கிலாந்து, வில் ஜக்ஸின் ஆட்டமிழக்காத 53 (22), டொம் பன்டனின் 30 (21), பில் ஸோல்டின் 28 (15), சாம் கர்ரனின் 25 (19), ஜேக்கப் பெத்தெல்லின் 23 (20), ஜேமி ஒவெர்ட்டனின் 15 (09), அணித்தலைவர் ஹரி ப்றூக்கின் 14 (09) ஓட்டங்களோடு 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 202 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில், ஜே.ஜே.ஸ்மட்ஸ் 3-0-24-1 என்ற பெறுதியைக் கொண்டிருந்தார்.

பதிலுக்கு 203 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இத்தாலி, பென் மனென்டியின் 60 (25), கிரான்ட் ஸ்டூவர்ட்டின் 45 (23), ஜஸ்டின் மொஸ்காவின் 43 (34) ஓட்டங்களோடு போராடியபோதும் ஜொஃப்ரா ஆர்ச்சர் (2), ஜேமி ஒவெர்ட்டன் (3), வில் ஜக்ஸ், அடில் ரஷீட், சாம் கர்ரனிடம் (3) விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 20 ஓவர்களில் 178 ஓட்டங்களையே பெற்று 24 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

இப்போட்டியின் நாயகனாக வில் ஜக்ஸ் தெரிவானார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X