2026 பெப்ரவரி 19, வியாழக்கிழமை

இ – 20 உலகக் கிண்ணம்: நெதர்லாந்துக்கு வெற்றியிலக்கு 194 ஓட்டங்கள்

Shanmugan Murugavel   / 2026 பெப்ரவரி 18 , பி.ப. 09:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையில் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், அஹமதாபாத்தில் தற்போது நடைபெற்று வரும் நடப்புச் சம்பியன்களான இந்தியாவுக்கெதிரான குழு ஏ போட்டியில் நெதர்லாந்து வெற்றி பெறுவதற்கு 194 ஓட்டங்களைப் பெற வேண்டியுள்ளது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா, ஷிவம் டுபேயின் 66 (31), அணித்தலைவர் சூரியகுமார் யாதவ்வின் 34 (28), திலக் வர்மாவின் 31 (27), ஹர்திக் பாண்டியாவின் 30 (21) ஓட்டங்களோடு 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 193 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. பந்துவீச்சில் அர்யன் டுட் 4-0-19-2, கைல் கிளெய்ன் 4-0-38-1, பஸ் டீ லீட் 4-0-28-0 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .