Shanmugan Murugavel / 2026 மார்ச் 08 , பி.ப. 10:44 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில் இந்தியா சம்பியனாகியது.
அஹமதாபாத்தில் முடிவுக்கு வந்த இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தியே இந்தியா சம்பியனானது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட இந்தியா, சஞ்சு சாம்சனின் 89 (46), இஷன் கிஷனின் 54 (25), அபிஷேக் ஷர்மா 52 (21), ஷிவம் டுபேயின் ஆட்டமிழக்காத 26 (08), ஹர்திக் பாண்டியாவின் 18 (13) ஓட்டங்களுடன் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 255 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில் அணித்தலைவர் மிற்செல் சான்ட்னெர் 4-0-33-0, கிளென் பிலிப்ஸ் 1-0-5-0, ஜேம்ஸ் நீஷம் 4-0-46-3 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.
பதிலுக்கு 256 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து, அக்ஸர் பட்டேல் (3), ஜஸ்பிரிட் பும்ரா (4), ஹர்திக் பாண்டியா, வருண் சக்கரவர்த்தி, அபிஷேக் ஷர்மாவிடம் விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 19 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 159 ஓட்டங்களையே பெற்று 96 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
இப்போட்டியின் நாயகனாக பும்ரா தெரிவானார்.
5 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago