Shanmugan Murugavel / 2026 மார்ச் 02 , மு.ப. 10:03 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரிலிருந்து பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்கள், முக்கியமான வீரர்களுக்கு உடற்றகுதிப் பிரச்சினைகள், அதிகப்படியான வெளி எதிர்மறைக் கருத்துகளாலேயே வெளியேற வேண்டி வந்ததாக இலங்கையணியின் தலைவர் தசுன் ஷானக தெரிவித்துள்ளார்.
இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத்துக்கு முன்னரும் மோசமான போட்டி முடிவுகள் காரணமாக இலங்கையானது பொதுவெளியில் குறிப்பிடத்தக்க விமர்சனத்தை எதிர்நோக்கியிருந்த நிலையில், சிம்பாப்வே, இங்கிலாந்து, நியூசிலாந்துக்கெதிராக உலகக் கிண்ணத்தில் பெற்ற தோல்வி காரணமாக விமர்சனம் இன்னும் அதிகரிக்குமென்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் எதிர்கால தலைமுறை வீரர்களைப் பாதுகாப்பதற்காக அரசாங்கம் தலையிட வேண்டுமென ஷானக குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை நியூசிலாந்துக்கெதிரான போட்டியில் தானும் அணி முகாமைத்துவமும் கொழும்பு ஆர் பிரேமதாஸ ஆடுகளத்தை தவறாகப் புரிந்து கொண்டதாகவும், ஆரம்பத்திலிருந்து அதிகமான சுழற்சியை வழங்குமென தான் எதிர்பார்க்கவில்லையென ஷானக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் உலகக் கிண்ணத்தில் ஆடுகளங்கள் மேலும் துடுப்பாட்டத்துக்குச் சாதகமாக இருக்குமென நம்பியதாகவும் ஷானக கூறியுள்ள நிலையில் உலகக் கிண்ணம் ஆரம்பிப்பதற்கு முன்பாகவும் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இலங்கை ஆடுகளங்கள் இருப்பது குறித்து ஷானக விமர்சித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026