Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Shanmugan Murugavel / 2025 ஜூலை 03 , மு.ப. 09:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து, இந்திய அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்டில் முன்னிலைக்கு இரண்டு அணிகளும் போராடுகின்றன.
ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியை இங்கிலாந்து வென்ற நிலையில், பேர்மிங்ஹாமில் புதன்கிழமை (02) ஆரம்பித்த இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற இங்கிலாந்தின் அணித்தலைவர் பென் ஸ்டோக்ஸ், இந்தியாவை முதலில் துடுப்பெடுத்தாடப் பணித்தார்.
இந்திய அணியில் கடந்த போட்டியில் விளையாடிய சாய் சுதர்சன், ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரிட் பும்ராவை நிதிஷ் குமார் ரெட்டி, வொஷிங்டன் சுந்தர், ஆகாஷ் டீப் ஆகியோர் பிரதியிட்டிருந்தனர்.
அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய இந்தியா ஆரம்பத்திலேயே லோகேஷ் ராகுலை கிறிஸ் வோக்ஸிடம் இழந்தது. பின்னர் யஷஸ்வி ஜைஸ்வாலும், கருண் நாயரும் ஓட்டங்களைச் சேர்த்த நிலையில், 31 ஓட்டங்களுடன் பிறைடன் கார்ஸிடம் நாயர் வீழ்ந்தார்.
ஜைஸ்வாலும், அணித்தலைவர் ஷுப்மன் கில்லும் இனிங்ஸை நகர்த்த முற்பட்ட வேளை அணித்தலைவர் பென் ஸ்டோக்ஸிடம் 87 ஓட்டங்களுடன் ஜைஸ்வால் வீழ்ந்தார். தொடர்ந்து றிஷப் பண்டின் இணைப்பில் இனிங்ஸை கில் நகர்த்திய நிலையில் 25 ஓட்டங்களுடன் ஷொய்ப் பஷிரிடம் பண்ட் வீழ்ந்ததோடு, அடுத்து வந்த நிதிஷ் குமார் ரெட்டியும் அடுத்த ஓவரிலேயே வோக்ஸிடம் வீழ்ந்தார்.
பின்னர் இரவீந்திர ஜடேஜாவின் இணைப்பில் கில் ஓட்டங்களைச் சேர்க்கின்ற நிலையில் முதல் நாள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 310 ஓட்டங்களை இந்தியா பெற்றுள்ளது. களத்தில் கில் 114 ஓட்டங்களுடனும், ஜடேஜா 41 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமலுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
04 Jul 2025